News April 21, 2024
இந்தியாவில் தொழில் தொடங்க சரியான நேரம் இதுதான்!

இந்தியாவில் தொழில் தொடங்க சரியான நேரம் இதுதான் என சர்வதேச நிறுவனங்களுக்கு OYO சிஇஓ ரிதேஷ் அகர்வால் அழைப்பு விடுத்துள்ளார். தனது X பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “நீங்கள் சர்வதேச நிறுவனமாகவோ, ஸ்டார்ட் அப் அல்லது தொழில்துறையில் இருந்து இந்தியா உங்கள் தேடலில் இல்லையென்றால் நீங்கள் மிகப்பெரிய ஒன்றை இழக்கிறீர்” எனவும், உலகின் திறமைகளின் தலைநகரமாக இந்தியா முன்னேறி வருகிறதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 18, 2025
பள்ளி மாணவர்கள் நெரிசல் இல்லாமல் பஸ்ஸில் போகலாம்!

மாணவர்கள் அரசு பஸ்களில் நெரிசலின்றி பள்ளிக்கு செல்லும் திட்டத்தை சென்னையில் DCM உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, 25 பள்ளிகளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, காலையில் பள்ளி மாணவர்களை மட்டும் ஏற்றிவிட்டு பள்ளி வளாகத்திற்குச் செல்லும் மாநகர பஸ்கள், மாலையில் அதே வழித்தடத்தில் சென்று அவர்கள் பகுதியில் இறக்கிவிடும். தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருமா?
News August 18, 2025
நான் இறந்துவிட்டேன்.. கல்லூரி மாணவர் விபரீத முடிவு

‘நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம். எனது மரணம் என் சொந்த முடிவு. ஓராண்டாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ நொய்டாவில் தற்கொலை செய்த மாணவர் சிவம் டே(24) எழுதிய வரிகள் இவை. மாணவன் 2 ஆண்டுகளாக கல்லூரிக்கு வரவில்லை எனவும், அதனை கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 18, 2025
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? திருச்சி சிவா பதில்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக திமுகவின் திருச்சி சிவாவை களமிறக்க ‘INDIA’ கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது வரை யாரும் பரிசீலனையில் இல்லை என INDIA கூட்டணி தரப்பு கூறியது. டெல்லியில், வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்தையும் INDIA கூட்டணி கூட்டியுள்ளது. இதனிடையே, வேட்பாளர் தேர்வு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.