News March 20, 2024
கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

அரவிந்த் கெஜ்ரிவால் தொடுத்த வழக்கு குறித்து பதிலளிக்கக்கோரி, அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை 9 சம்மன்கள் அனுப்பியதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், ED-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஏப்.22க்கு ஒத்திவைத்தது.
Similar News
News December 6, 2025
பள்ளி மாணவி கர்ப்பம்.. ஆசிரியருக்கு அதிரடி தண்டனை

குன்னூரில் கடந்த 2023-ல் 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இசை ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இசைப் பயிற்சிக்கு சென்ற மாணவியை, ஆசிரியர் பிரசாந்த் ரேப் செய்த நிலையில், மாணவி கர்ப்பமானார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த கோர்ட், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ₹2 லட்சம் நிவாரணம் அளிக்கவும் TN அரசுக்கு உத்தரவிட்டது.
News December 6, 2025
அவர்களின் இலக்கு நேரு அல்ல: சோனியா காந்தி

சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பையும் செய்யாதவர்கள், நேருவை நாட்டின் எதிரியாக கட்டமைக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக சோனியா காந்தி சாடியுள்ளார். நேருவை வரலாற்றில் இருந்து நீக்குவது அவர்களது முக்கிய இலக்கு அல்ல. அவர் ஏற்படுத்திய சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளை சிதைப்பதுதான் இலக்கு. நேருவை ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது என்பது வேறு, இது வேறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
பாடங்களுடன் கலையையும் கற்பிக்க வேண்டும்: அன்புமணி

<


