News November 18, 2024
தமிழர்களை தீவிரவாதிகள் எனக் கூறவில்லை: ஷோபா
திருச்சிக்கு மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே இன்று வருகை தந்தார். அப்போது, தான் தமிழர்களை தீவிரவாதிகள் எனக் கூறவில்லை என்றார். பாகிஸ்தானியர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற்று குண்டு வைத்ததாகவே தான் கூறியதாகவும், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் மன்னிப்பு கேட்டதாகவும் ஷோபா விளக்கம் அளித்தார். பெங்களூர் குண்டுவெடிப்புக்கு தமிழத்தில் இருந்து வந்தவர்களே காரணம் என ஷோபா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 20, 2024
மீண்டும் ஒரு அணு ஆயுதம். தப்புமா பூமி?
80 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் மீது வீசப்பட்ட அணு ஆயுதங்களின் தாக்கம் இன்றளவும் பாதிப்பை தருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது அணு ஆயுதத்தை வீசுவோம் என ரஷ்யா எச்சரித்திருப்பது உலக நாடுகளை திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது. அமெரிக்கா தயாரித்த தொலைதூர ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் ஏவியதையடுத்து ரஷ்ய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால், பதற்றமான சூழல் நிலவுகிறது.
News November 20, 2024
கொட்டித் தீர்க்கும் மழை
திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மேலும், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பரவலாக மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
News November 20, 2024
யாராலும் எங்களை சேர்க்க முடியாது: ரஹ்மான் தம்பதி
ஏஆர் ரஹ்மான்-சாயிரா பானு தம்பதியர் பிரிவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும், சில சிரமங்களும் பதற்றங்களும் தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் இணைக்க யாராலும் பாலமாக செயல்பட முடியாது. மிகுந்த வலியுடன் இந்த முடிவை எடுத்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.