News September 14, 2024
CM-ஆக அல்ல.. சகோதரியாக கேட்கிறேன்: மம்தா

கொல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்திற்கு நேரில் சென்று, முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கனமழையில் இரவு முழுவதும் போராட்டம் நடத்தியதால் தன்னால் தூங்க முடியவில்லை எனவும், முதல்வராக அல்ல.. சகோதரியாக வந்திருக்கிறேன், இப்படி செய்யாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
Similar News
News December 9, 2025
ராஜீவ் காந்தி – சோனியா.. நீங்கா நினைவுகள் PHOTOS

ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின், சோனியா காந்தியின் வாழ்க்கை முழுவதுமாக மாறியது. இத்தாலியில் பிறந்த அவர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று, 2 முறை காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினார். இன்று அவரது 79-வது பிறந்த நாளில், ராஜீவ் காந்தியுடன் இருக்கும் சில மறக்க முடியாத போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 9, 2025
TOSS: இந்திய அணி பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
பிளேயிங் லெவனில் அபிஷேக், கில், சூர்யகுமார், திலக், ஹர்திக், துபே, ஜித்தேஷ், அக்ஷர், பும்ரா, அர்ஷ்தீப், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பின் டி20-ல் ஹர்திக் பாண்ட்யா இணைந்துள்ளதால் பேட்டிங் மற்றும் பவுலிங்கின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.
News December 9, 2025
தெரு நாய்க்கடி.. பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

தெரு நாய்க்கடி தொடர்பாக பள்ளிகளுக்கு அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டால் தயக்கமின்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்குமாறு மாணவர்களுக்கு உரிய ஆலோசனை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தெரு நாய்களுக்கு உணவு தருவது உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாய்க்கடியால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


