News July 5, 2025
காதலிக்கு ‘நோ’.. மாணவி முகத்தில் கத்தி கீறல்!

+2 மாணவி ஒருவரை காதலிக்க மறுத்ததால், அவரது முகத்தில் பேனா கத்தியால் கிழித்த இளைஞர் இளைஞரை போலீஸ் தேடி வருகிறது. விருத்தாசலத்தில், ஒரு வருடமாக பின்னால் அலைந்து காதலிப்பதாக தொல்லை கொடுத்து வந்துள்ளார் அருள்குமார். இந்நிலையில், இன்று பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தபோது இந்த கொடூரத்தை செய்துவிட்டு தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Similar News
News July 5, 2025
பிரபல மார்வெல் பட நடிகர் காலமானார்!

பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜூலியன் மக்மஹோன் (56) புற்றுநோயால் காலமானார். இந்திய ரசிகர்களுக்கு மார்வெலின் ‘Fanstastic Four’ படங்களில் Dr.Doom கேரக்டரில் நடித்து பரிச்சயமான இவர், அண்மையில் FBI தொடரில் நடித்து உலகளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளார். ஆஸ்திரேலிய Ex. PM வில்லியமின் மகனான இவரின் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIP
News July 5, 2025
சொந்த வீடு கட்டடம் அல்ல கனவும் மரியாதையும்!

சொந்த வீடு வெறும் கட்டடமல்ல, வாழ்நாள் கனவு. அதை வாங்க எத்தனை போராட்டங்களையும், தியாகங்களையும், அவமானங்களையும் கடக்க வேண்டும் என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இந்த போராட்டங்களுக்கு மத்தியில் பலரும் வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர். அந்த வலிகளையும், போராட்டங்களையும் சினிமாத்துவம் இன்றி அழகாக கண் முன் காட்டியுள்ளது 3BHK திரைப்படம். நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு சொந்த வீடு வாங்குனீங்க?
News July 5, 2025
பொன்முடிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் எச்சரிக்கை

பொன்முடிக்கு எதிரான வழக்கில் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால், சிபிஐ-க்கு மாற்றப்படும் என்று ஐகோர்ட் எச்சரித்துள்ளது. பெண்கள் & சைவ – வைணவ சமயங்கள் குறித்து பொன்முடி சர்ச்சையாக பேசியது தொடர்பாக தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால், அவற்றின் மீதான புலன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட், விசாரணையை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.