News July 5, 2025
பிரபல மார்வெல் பட நடிகர் காலமானார்!

பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜூலியன் மக்மஹோன் (56) புற்றுநோயால் காலமானார். இந்திய ரசிகர்களுக்கு மார்வெலின் ‘Fanstastic Four’ படங்களில் Dr.Doom கேரக்டரில் நடித்து பரிச்சயமான இவர், அண்மையில் FBI தொடரில் நடித்து உலகளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளார். ஆஸ்திரேலிய Ex. PM வில்லியமின் மகனான இவரின் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIP
Similar News
News November 18, 2025
BREAKING: இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

கனமழை எதிரொலியால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாகை, தருமபுரி, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நாகையில் மழை படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ரஜினிக்கு பாராட்டு விழா நடத்தும் மத்திய அரசு

கோவாவில் வரும் 20 முதல் 28-ம் தேதி வரை, சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. அதில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் பாலய்யாவை கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பாராட்டுவிழா, வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாராட்டு விழா நடத்த சிலர் முன் வந்த போது, ரஜினி அதை தவிர்த்துவிட்டார்.