News November 29, 2024
5 மற்றும் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ஃபெஞ்சல் புயல் நெருங்கி வருவதால், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர் துறைமுகத்தில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பது பொருள். 7ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
Similar News
News April 26, 2025
வெடி விபத்தில் பலியான 4 பேர் குடும்பத்திற்கு நிதியுதவி

சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் வெடி விபத்தில் பலியான 4 பேர் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். கோயில் விழாவுக்கு பட்டாசு எடுத்து செல்லுகையில் நேரிட்ட வெடி விபத்தில் செல்வராஜ், தமிழ்செல்வன், லோகேஷ், கார்த்தி பலியாகினர். அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள CM, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கவும் ஆணையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
News April 26, 2025
கடைசி இடத்தில் இருக்கும் ஃபீல்.. சேவாக் கருத்து

புள்ளிப் பட்டியலில் கடைசியில் இருப்பது எப்படி இருக்கும் என்பதை CSK வீரர்கள் உணர்வார்கள் என சேவாக் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வரும் CSK பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், CSK 10-வது இடத்தைப் பிடிக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் சேவாக் தெரிவித்துள்ளார். CSK-ன் இந்த மோசமான ஆட்டத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
News April 26, 2025
கார் குண்டுவெடிப்பு.. ரஷ்ய ராணுவ தளபதி பலி

ரஷ்ய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக், கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளார். மாஸ்கோ அருகே குடியிருப்புப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் தரப்பில் எந்த தகவலும் கூறப்படவில்லை. உக்ரைன் உடனான போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காப் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.