News September 21, 2024

விமானப்படையின் புதிய தளபதி

image

விமானப்படையின் தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் (59) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது விமானப்படையின் துணைத் தலைவராக உள்ளார். விமானப்படை தளபதியாக தற்போது இருக்கும் ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதாரி, செப்.30இல் பதவி விலகும் நிலையில், அரசு புதிய தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங்கை அறிவித்துள்ளது. இவர் 1984 முதல் கடந்த 40 ஆண்டுகளாக விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.

Similar News

News August 22, 2025

பெண்களை ஏளனமாக பேசும் திமுக அமைச்சர்கள்: நயினார்

image

விருதுநகரில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக முறையிட்ட பெண்களிடம், ‘கம்மல் இருந்தால் ₹1,000 தர முடியாது’ என அமைச்சர் <<17480686>>KKSSR<<>> பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், திட்டங்களை தருகிறோம் என்ற பெயரில் மென்மேலும் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாக பேசுவது கண்டிக்கத்தக்கது என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். இதற்கு அமைச்சர், தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News August 22, 2025

BREAKING: பாஜகவில் இணையும் திமுகவின் முகம்

image

திமுகவின் Ex செய்தித்தொடர்பாளர் KS ராதாகிருஷ்ணன் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைகிறார். நெல்லையை சேர்ந்த இவர், Ex முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி ஆகியோருடன் நல்ல நட்பில் இருந்தவர். கடந்த 2022-ல் மல்லிகார்ஜுன கார்கேவை விமர்சனம் செய்ததற்காக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 1989, 1996 தேர்தல்களில் கோவில்பட்டியில் போட்டியிட்ட இவர், தென் மாவட்டங்களில் இப்போதும் திமுகவின் முகமாக அறியப்படுகிறார்.

News August 22, 2025

நடிகைகள் பாலியல் புகார்.. MLA பதவி விலகல்?

image

கேரள நடிகைகள் பாலியல் புகார் அளித்த நிலையில், பாலக்காடு MLA ராகுல் மாங்கூட்டத்தில் பதவியை ராஜினாமா செய்ய கட்சி தலைமை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று, அவர் மாநில இளைஞர் காங்., தலைவர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று திருநங்கை ஒருவரும், MLA மீது பாலியல் புகார் அளித்துள்ளார். 2026-ல் தேர்தல் வரவுள்ள நிலையில், இவ்விவகாரம் காங்கிரஸுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!