News August 22, 2025
BREAKING: பாஜகவில் இணையும் திமுகவின் முகம்

திமுகவின் Ex செய்தித்தொடர்பாளர் KS ராதாகிருஷ்ணன் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைகிறார். நெல்லையை சேர்ந்த இவர், Ex முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி ஆகியோருடன் நல்ல நட்பில் இருந்தவர். கடந்த 2022-ல் மல்லிகார்ஜுன கார்கேவை விமர்சனம் செய்ததற்காக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 1989, 1996 தேர்தல்களில் கோவில்பட்டியில் போட்டியிட்ட இவர், தென் மாவட்டங்களில் இப்போதும் திமுகவின் முகமாக அறியப்படுகிறார்.
Similar News
News January 24, 2026
இஞ்சி டீ குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

இஞ்சி டீ-யில் மருத்துவ குணங்கள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஞ்சியின் தினசரி பயன்பாடு 4 கிராமுக்கு மேல் சென்றால் வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், பித்த நீர் அதிகமாக சுரக்கும் என்பதால் பித்தப்பை கல் பிரச்னை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.
News January 24, 2026
இந்த கூட்டணிக்கு டிக் அடிக்கப்போகிறாரா விஜய்?

தவெகவிடம் தற்போது இரண்டு தேசிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. NDA கூட்டணிக்கு அழைக்கும் பாஜக, கேட்கும் தொகுதிகள், கைகாட்டுபவர்களுக்கு MP சீட், Dy CM சீட் தருவதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறது. இன்னொரு பக்கம் டெல்லி காங்கிரசும் பேசிவருவதாக சொல்கின்றனர். எனவே கூட்டணி வைத்து போட்டியா, தனித்து போட்டியா என பனையூரில் தீவிர ஆலோசனை நடந்துவருவதாக தகவல் கசிந்துள்ளது.
News January 24, 2026
ஜன.27-ல் ஜன நாயகன் வழக்கில் தீர்ப்பு

‘ஜன நாயகன்’ பட சென்சார் வழக்கு தொடர்பாக ஜன.27 காலை 10.30 மணிக்கு சென்னை HC தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால் படக்குழு மட்டுமல்லாது, விஜய் ரசிகர்களும் குஷியில் உள்ளனர். ஒருவேளை படத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்தால் பிப்ரவரி 2-வது வாரத்திலேயே ஜன நாயகன் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விஜய் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.


