News April 9, 2024
இதை விட ஒரு மோசமான ஆட்சி இதற்கு முன் இருந்தது இல்லை

பாஜக ஆட்சியை விட மோசமான ஆட்சி இதுவரை இந்தியாவில் நடைபெற்றதில்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்தது அவர் பரப்புரை செய்தார். அப்போது, “இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இதை குறைக்க மோடி எதுவுமே செய்யவில்லை” என்று விமர்சித்தார். சிவகங்கையில் 1984இல் முதல்முறையாக போட்டியிட்டு அவர் எம்.பியானார்.
Similar News
News August 11, 2025
தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ஆதரவு!

சென்னையில் போராடி வரும் தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். பனையூரில் விஜய்யை சந்தித்த பிறகு பேசிய போராட்ட குழுவினர், விஜய் போராட்ட பந்தலுக்கு நேரில் வர விரும்பியதாகவும், ஆனால் டிராஃபிக் பிரச்னை ஏற்படும் என்பதால் தாங்கள் இங்கு வந்ததாகவும் கூறினர். மேலும், முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகவும் கூறினர். இது DMK அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
News August 11, 2025
மழைக்காலத்தில் இருமல் பிரச்சனையா?

மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டது.
*தீராத இருமலுக்கு தேன் மிகச்சிறந்த மருந்து. தொண்டையின் உள்பகுதியில் இருக்கும் புண் மற்றும் அரிப்பை தேன் குணப்படுத்தும். *உப்புநீரில் வாய்க் கொப்பளித்து வந்தால் தொண்டையில் உள்ள நோய்க்கிருமிகள் அழிந்து, இருமல் தீரும். *சளி, இருமலை குணப்படுத்த இஞ்சியும் உதவும். இதை இஞ்சி டீ, இஞ்சி சாறாகவும் உட்கொள்ளலாம்.
News August 11, 2025
உக்ரைனில் அமைதி திரும்ப உதவுவதாக PM மோடி உறுதி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி PM மோடியுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ரஷ்யா – உக்ரைன் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளங்கியதாகவும், இரு நாடுகளிடையே அமைதி ஏற்பட அனைத்து உதவிகளையும் செய்வேன் எனவும் உறுதி அளித்ததாக PM மோடி தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். புதின் இந்தியா வரவுள்ள நிலையில், ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதை குறைக்க ஜெலன்ஸ்கி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.