News August 10, 2025
நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

*ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும். *என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். *நம்பிக்கை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம், அதை உங்களிடமிருந்து பறிக்கக்கூடிய சக்தி, இந்தப் பூமியில் யாரிடமும் இல்லை.
Similar News
News August 10, 2025
தமிழக மீனவர்கள் 7 பேரை விடுவிக்கக் கோரி கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த 7 மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், வாழ்வதாரத்துக்காக கடலையே நம்பியிருந்த மீனவர்கள் தற்போது சிறைவாசத்தை கண்டு அச்சத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மீனவர்கள் நீண்டகாலம் சிறை வைக்கப்படுவதால் அவர்களது வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
News August 10, 2025
வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன்: ரம்யா

‘கேப்டன் பிரபாகரன்’ படம் கொடுத்த வெற்றியும், தனக்கு கிடைத்த புகழும் அதிகம் என ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தமாதிரி வெற்றி கிடைக்க 10 ஆண்டுகள் காத்திருந்ததாகவும், ‘படையப்பா’ படத்தில் தான் அப்படிப்பட்ட வெற்றி கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ‘ஆட்டமா தேரோட்டமா’ காலத்தால் அழியாத பாடல் எனவும், அப்பாடல் மூலம் தனக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News August 10, 2025
தங்கமா அல்லது நிலமா? எதில் முதலீடு செய்யலாம்?

பங்குச்சந்தையின் கிங் என அழைக்கப்படும் வாரன் பஃபெட், தங்கத்தை மதிப்புமிக்கதாக கருதவில்லை. அவரிடம் ₹12 லட்சம் கோடி சொத்துக்கள் இருந்தும், தங்கத்தில் ஒரு பைசா கூட முதலீடு செய்யவில்லை. தங்கமா (அ) நிலமா? என கேட்டால், நிலத்தையே மதிப்புமிக்கதாக கருதுகிறார். தங்கத்தை விட நிலத்தில் முதலீடு, தொழில் செய்வதுதான் பெஸ்ட் என கூறுகிறார். இதன்மூலம், நீண்ட காலத்திற்கு நிலையான பலன்கள் கிடைக்கும் என நம்புகிறார்.