News March 17, 2024
நெல்லை:எம்எல்ஏ அலுவலகம் மூடல்

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. MLA அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக பூட்டி அதன் சாவியை அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பாளை எம்எல்ஏ அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு சாவியை தாசில்தாரிடம் நேற்று (மார்ச் 16) ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News January 4, 2026
நெல்லை: உங்க பெயரை CHANGE செய்வது இனி ரொம்ப சுலபம்..

நெல்லை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். <
News January 4, 2026
நெல்லை: டூவீலர் விபத்தில் முதியவர் பலி!

கருவேலங்குளத்தை சேர்ந்தவர் விவசாயி ராமகிருஷ்ணன் (70). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இவர் தனது மொபட்டில் சேரன்மகாதேவி சாலை பிளவக்கல் இசக்கியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென மொபட் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
News January 4, 2026
நெல்லை: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

நெல்லை மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!


