News May 7, 2025
பாமகவை நெருங்கும் NDA.. கூட்டணி பேச்சு தீவிரம்!

பாமகவை NDA கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அண்மையில், டெல்லியில் பாமகவினர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியபோது கூட கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அன்புமணியின் ராஜ்யசபா MP பதவி அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்து மீண்டும் அவருக்கு MP பதவியை வழங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
Similar News
News January 19, 2026
திமுகவில் விலகி அதிமுகவில் இணைந்தார்

தேர்தல் வரவுள்ளதால், மாற்றுக்கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் கொண்டுவர திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகள் போட்டி போட்டு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் இணைக்கும் படலம் தொடர்கிறது. அந்த வகையில், இன்று கோவை, ஆனைமலை மேற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர், எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
News January 19, 2026
மாணவர்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறையில்லையா?

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக அன்புமணி கூறியுள்ளார். இதுகுறித்து எந்த கவலையும் இல்லாமல், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக விமர்சித்த அவர், அடக்குமுறை மூலம் ஆசிரியர்களை பணிய வைத்து விடலாம் என்ற மனப்பான்மையை கைவிட்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
News January 19, 2026
‘Live In’ உறவு பாதுகாப்பானது அல்ல: மதுரை HC

பெருகும் ‘Live In’ உறவு முறையில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக மதுரை HC நீதிபதி ஸ்ரீமதி எச்சரித்துள்ளார். இதுகுறித்த வழக்கின் விசாரணையில், திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய பிரபாகரன் என்பவரை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். திருமண உறவு வழங்கும் எந்த பாதுகாப்பையும் ‘Live in’ தருவதில்லை என்றும், இதை பெண்கள் உணரும்போது யதார்த்தம் நெருப்பை போல சுடத் தொடங்குகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.


