News October 12, 2025
National Roundup: டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி

*உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க ₹35,400 கோடி மதிப்பிலான வேளாண் திட்டங்களை PM மோடி தொடங்கி வைத்தார். *உத்தரகாண்டில் வினாத்தாள் கசிவால் 416 பணியிடங்களுக்கான அரசுத் தேர்வு ரத்து. *ராஜஸ்தானில் மங்கத் சிங் என்ற பாகிஸ்தான் உளவாளி கைது. *பிஹார் தேர்தலில் அசாசுதீன் ஓவைசியின் AIMIM கட்சி 100 இடங்களில் போட்டி என அறிவிப்பு. *டெல்லியில் 5 நாள்களுக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி.
Similar News
News October 12, 2025
RECIPE: சுவையான பால் கேசரி ரெசிபி!

*முதலில் ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள் *வாணலியில் பாலைக்காய்ச்சி கொதித்து வந்தவுடன் ரவையை சேர்த்து கிளற வேண்டும் *ரவை நன்றாக வெந்த பிறகு, அதில் சர்க்கரை, சிறிதளவு குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள் *கேசரி பதத்திற்கு வந்ததும் ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து இறக்கினால் சுவையான பால் கேசரி தயார். SHARE IT.
News October 12, 2025
அதிமுகவில் போர்க்கொடி தூக்கும் மாஜிக்கள்?

செங்கோட்டையன் போட்ட வெடி நமத்து போய்விட்டது என இப்போதுதான் பெருமூச்சுவிட்டார் EPS. அதற்குள், மாவட்டங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் மாஜிக்கள் அவரை குடைய ஆரம்பித்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில், தாங்கள் கைகாட்டும் நபர்களுக்கே சீட் வழங்கணும் என அவர்கள் கூறுகிறார்களாம். ஆனால், அது தன்னுடைய முடிவு என்பதில் EPS தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது.
News October 12, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 69,996 கோடி டாலராக சரிந்துள்ளதாக RBI கூறியுள்ளது. கடந்த 3-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 27.6 கோடி டாலர் சரிந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால், ரூபாயின் மதிப்பு சரியும். மேலும் இறக்குமதிக்கான செலவு அதிகரிக்கும், விலைவாசி உயர்வதோடு பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.