News October 11, 2025

National Roundup : PM மோடியுடன் கேரள CM சந்திப்பு

image

*பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. *வயநாடு நிலச்சரிவுக்கு ₹2,221 கோடி நிதியை வழங்க வேண்டும் என PM மோடியிடம் கேரள CM பினராயி விஜயன் வலியுறுத்தல். *பிஹாரில், பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த 2 ராஷ்டிரீய ஜனதா MLA-க்கள் ராஜினாமா. *ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரிய வழக்கில், 6 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு SC உத்தரவு.

Similar News

News October 11, 2025

தேனி வைகை அணையின் இன்றைய நிலவரம்

image

தேனிமாவட்டம் வைகை அணையின் இன்றைய (அக்டோபர்.11)நிலவரம். அணையின் மொத்த உயரம் 71 அடி, தற்போதைய நீர்மட்டம் 62.73 அடி, அணையின் மொத்த கொள்ளளவு 6091 மில்லியன் கன அடி, அணையின் தற்போதைய கொள்ளளவு 4146 மில்லியன் கன அடி, அணைக்கு நீர்வரத்து 869 கன அடி, அணையில் நீர் 1499 கன அடி நீரானது வெளியேற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 11, 2025

ரஜினி, கமல் படங்களின் கேமராமேன் பாபு காலமானார்

image

MGR, சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்டோரின் முக்கிய படங்களில் கேமராமேனாக பணியாற்றிய பாபு(88) மாரடைப்பால் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் முரட்டுக்காளை, கழுகு, பாயும் புலி, கமல்ஹாசனின் தூங்காதே தம்பி தூங்காதே, சகலகலா வல்லவன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். சில படங்களில் நடிகராகவும் இருந்தார். பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIP

News October 11, 2025

இப்போது இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. ALERT

image

மதிய உணவுக்காக ஹோட்டலுக்கு செல்வது என்பது மாதம் ஒரு முறை, வாரத்திற்கு ஒரு முறை என்று தொடங்கி இன்று பலருக்கு ‘தினமும்’ என்ற நிலையாகி விட்டது. இதனால் பட்ஜெட்டை முன்னிறுத்தி, குறைந்த விலையில் கிடைக்கும் உணவுகளை பலரும் சாப்பிடுகின்றனர். நமது உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மதிய உணவில் சிலவற்றை நாம் தவிர்த்தே ஆக வேண்டும். தவிர்க்க வேண்டிய மதிய உணவுகளை swipe செய்து பாருங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!