News October 11, 2025

ரஜினி, கமல் படங்களின் கேமராமேன் பாபு காலமானார்

image

MGR, சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்டோரின் முக்கிய படங்களில் கேமராமேனாக பணியாற்றிய பாபு(88) மாரடைப்பால் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் முரட்டுக்காளை, கழுகு, பாயும் புலி, கமல்ஹாசனின் தூங்காதே தம்பி தூங்காதே, சகலகலா வல்லவன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். சில படங்களில் நடிகராகவும் இருந்தார். பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIP

Similar News

News December 17, 2025

TVK என்பது சோஷியல் மீடியா கட்சி: இராம.சீனிவாசன்

image

களத்தில் பணி செய்ய தொண்டர்கள் இல்லாத, தேர்தலில் நின்று வாக்கு சதவீதத்தை நிரூபிக்காத ஒரே கட்சி தவெகதான் என்று பாஜகவின் இராம.சீனிவாசன் விமர்சித்துள்ளார். தவெக என்பது சோஷியல் மீடியா கட்சி என்று சாடிய அவர், பாஜக கூட்டணிக்கு தவெக வருமா என்பதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும் என்றார். மேலும், ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி ஆரம்பிக்கும்போது விஜய்க்கு கூட்டம் சேர்ந்ததை விட 20 மடங்கு அதிகம் என்றார்.

News December 17, 2025

BREAKING: முட்டை சாப்பிடுவோர் கவனத்திற்கு..

image

முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் என பரவி வரும் செய்தியால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தின் சுந்தர்ராஜ் விளக்கமளித்துள்ளார். முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் என பரவும் தகவல் வெறும் வதந்தி. நைட்ரோபியூரானுக்கு உலகளாவிய தடை விதிக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், முட்டைகள் எப்போதும் பாதுகாப்பாகவே உள்ளதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

News December 17, 2025

சாலைகள் ஏன் கருப்பு நிறத்தில் போடப்படுகின்றன தெரியுமா?

image

உலகில் எங்கு சென்றாலும், சாலைகள் கருப்பு நிறத்திலேயே போடப்பட்டிருப்பதன் காரணம் தெரியுமா? சாலை போட பயன்படுத்தப்படும் நிலக்கீல் (Bitumen) கருப்பு நிறம் கொண்டது. ஆனால், இது மட்டுமே காரணமில்லை. கருப்பு நிறம் அதிக சூரிய ஒளியை உறிஞ்சுகிறது. எனவே, மழைக்குப் பிறகு சாலைகளில் நீர் விரைவாக ஆவியாகி, சாலைகயின் வழுக்கும் தன்மை குறைகிறது. அதே போல, இந்த நீலக்கீல் சாலைகளை போடவும், பராமரிக்கவும் செலவு மிக குறைவு.

error: Content is protected !!