News October 13, 2025
National Roundup: உடனே DGP-ஐ மாற்ற அறிவுறுத்தல்

*ஜம்மு & காஷ்மீர் ராஜ்யசபா தேர்தலுக்கு 3 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. *மே.வங்கத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தனது மகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அப்பெண்ணின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார். *ஹரியானாவில் சாதிய பாகுபாட்டால் IPS அதிகாரி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், உடனே DGP-ஐ மாற்ற, அம்மாநில அரசு அமைத்த குழு அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 13, 2025
11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 18-ம் தேதி வரையிலும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. எனவே, வெளியே செல்லும் போது கவனமாக இருங்க.
News October 13, 2025
ஆச்சரியம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறியும் போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.
News October 13, 2025
சபரிமலை தங்கம் மாயம்: கூட்டு கொள்ளை அடித்தது அம்பலம்

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில், தேவஸ்தான அதிகாரிகள் கூட்டு கொள்ளையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. தங்க தகடுகளை புதுப்பிக்க இடைத்தரகராக செயல்பட்ட உன்னி கிருஷ்ணன் போற்றி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர் உள்ளிட்ட 10 பேர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சபரிமலை துவார பாலகர் சிலைகளின் கவசங்களில் 986 கிராம் தங்கம் குறைந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.