News May 17, 2024
என் கேப்டன்சி மிகவும் எளிமையானது: ஹர்திக்

வெற்றி, தோல்வி முடிவுகளை பார்க்கக் கூடிய கேப்டன் நான் கிடையாது என MI கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். லக்னோவுக்கு எதிரான போட்டிக்கு முன் பேசிய அவர், தனது கேப்டன்சி மிகவும் எளிமையானது என்றும், நம்பிக்கையையும், அன்பையும் கொடுத்தால் வீரர்கள் 100% உழைப்பைக் கொடுப்பார்கள் என்றும் கூறினார். மேலும், வீரர்கள் என்ன மாதிரியான அணுகு முறையை காட்டுகிறார்கள் என்று கவனிப்பதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News September 16, 2025
இதுபோன்ற பேச்சை பொன்முடி தவிர்த்திருக்கலாம்: HC

சைவ, வைணவ மதங்களை ஒப்பிட்டு, பெண்கள் பற்றி பொன்முடி அவதூறாக பேசியதை சென்னை HC தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. தற்போது இந்த வழக்கை முடித்துவைத்துள்ள HC, பொறுப்பான பதவியிலிருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சுக்களை தவிர்த்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. புகாரளித்தவர்களிடம் போலீஸார் முறையாக விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என்றும், அவருக்கு எதிராக தனிநபர் புகாரளிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
News September 16, 2025
ஜோடியாக சுற்ற 8 இடங்கள்

இந்தியாவில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களில் ஜோடியாக செல்ல சில ஊர்கள் உள்ளன. அதில் சிறந்த 8 இடங்களை மேலே போட்டோக்களாக வழங்கி இருக்கிறோம். அனைத்தையும் பாருங்க. உங்க பேவரைட் சுற்றுலா ஸ்பாட் எது? நீங்கள் உங்க ஜோடியுடன் செல்ல விரும்பும் ஊர் எது? கமெண்ட்ல சொல்லுங்க. இதை உங்கள் ஜோடிக்கு share செய்து எந்த ஊருக்கு போகலாம்னு கேளுங்க?
News September 16, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு.. HAPPY NEWS

பள்ளிக்கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், TET தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. TET தேர்வு எழுத தங்கள் துறையிடமிருந்து தடையில்லா சான்று (NOC) பெற வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முதன்மை கல்வி அலுவலகங்களில் NOC-க்காக அலையும் வேலை மிச்சம் என ஆசிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர். SHARE IT.