News November 29, 2024
‘தீரன்’ பட பாணியில் திருப்பூரில் கொலை

பல்லடம் அருகே பண்ணை வீட்டில் தங்கியிருந்த செந்தில்குமார், அவரது பெற்றோர் அமலாத்தாள், தெய்வசிகாமணி ஆகியோர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவில், வீடு புகுந்த கொள்ளையர்கள் தூங்கிக்கொண்டிருந்த மூவரையும் கொன்றுவிட்டு நகை, பணத்துடன் தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனி வீட்டை குறிவைத்து ‘தீரன்’ பட பாணியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
Similar News
News April 25, 2025
LoC என்றால் என்ன?

Line of Control என்பது J&K, லடாக்கில் இந்தியா – பாகிஸ்தான் ராணுவங்களை பிரிக்கும் பகுதியாகும். 1972 சிம்லா ஒப்பந்தத்திற்கு பிறகு LoC நடைமுறைக்கு வந்தது. 1947 போருக்கு பிறகு, 1949-ல் கொண்டுவரப்பட்ட இது Cease Fire Line (CFL) என அழைக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி 1965, 1971-ல் பாக். போரில் ஈடுபட்டதால், 1972-ல் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தாகி, LoC-ஐ கொண்டு வரப்பட்டது.
News April 25, 2025
தமிழ்நாட்டில் காவல் ராஜ்ஜியம் நடக்கிறதா?… கவர்னர்

துணை வேந்தர்களை மாநாட்டில் பங்கேற்கவிடாமல் தடுத்த விதம் எமர்ஜென்சியை நினைவூட்டுவதாக கவர்னர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். காவல்துறையை பயன்படுத்தி VC-க்களை CM தடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஊட்டி சென்ற VC-க்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இங்கு காவல் ராஜ்ஜியமா நடக்கிறது? VC-க்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 25, 2025
போப் ஆண்டவர் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், வாடிகனில் நாளை போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்குகள் நடக்கும் நிலையில், நாளைய தினம் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.