News April 2, 2025
13 வயதில் கொலை… சிறுவனின் கண்ணை மறைத்த ஆத்திரம்!

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழிக்கு ஏற்ப மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. செல்போனை பிடுங்கி தண்ணீரில் வீசிய பெண்ணை, 13 வயது சிறுவன் கொலை செய்துள்ளான். வயலுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அந்த பெண் சிறுவனின் போனை பிடுங்கி தண்ணீரில் வீசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்து விபரீத செயலில் ஈடுபட்ட சிறுவன், தற்போது போலீசாரின் பிடியில் சிக்கி இருக்கிறான்.
Similar News
News March 13, 2026
அதிமுகவிடம் 10 இடங்களை கேட்கும் ஜான் பாண்டியன்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக விரைவில் தொடங்கும் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். அதிமுகவிடம் 10 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகமாக முடிவு எட்டப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், NDA கூட்டணிக்கு விஜய் வருவார் என்பது வதந்தி என்றும் அவர் தங்கள் கூட்டணிக்கு உறுதியாக வரமாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 13, 2026
மார்ச் 13: வரலாற்றில் இன்று

*1921 – மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது. *2008 – தங்கத்தின் விலை நியூயார்க்கில் முதல் தடவையாக அவுன்சுக்கு 1,000-ஐ தாண்டியது. *1980 – இந்திய அரசியல்வாதி வருண் காந்தி பிறந்த தினம். *1982 – இசையமைப்பாளர் தர்புகா சிவா பிறந்த தினம். *1994 – இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் பிறந்த தினம் *2015 – தமிழ் எழுத்தாளர் தி.சு.கிள்ளிவளவன் நினைவு தினம்.
News March 13, 2026
ரஜினி மிரட்டலுக்கு அஞ்சுபவர் இல்லை: நற்பணி மன்ற மா.செ.

ரஜினியின் அரசியல் குறித்து <<19363014>>ஆதவ் அர்ஜுனா<<>> பேசியதற்கு ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தின் சோளிங்கர் மா.செ., N.ரவி பதிலடி கொடுத்துள்ளார். கொரோனா தொற்று உயிர் இழப்புகளை தவிர்க்கவே அந்நேரத்தில் அரசியலுக்கு வரவில்லை என ரஜினி அறிவித்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மற்றவர்கள் மிரட்டலுக்கு அஞ்சுபவர் இல்லை எனவும், தனது பலத்தை நிரூபிக்க உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


