News October 11, 2025

Mrs.யுனிவர்ஸ்: வரலாற்று சாதனை படைத்த இந்தியா!

image

Mrs.யுனிவர்ஸ் 2025 பட்டத்தை வென்று இந்தியாவின் ஷெர்ரி சிங் மகுடம் சூடியுள்ளார். 48-வது Mrs.யுனிவர்ஸ் போட்டியின் இறுதிச்சுற்று, பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்றது. இதில், உலகெங்கிலும் இருந்து 120 போட்டியாளர்கள் போட்டியிட்ட நிலையில், ஷெர்ரி சிங் பட்டத்தை தட்டி சென்றார். இந்நிலையில், Mrs.யுனிவர்ஸ் பட்டத்தை முதல் முறையாக வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Similar News

News October 11, 2025

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயர்கிறது: CM ஸ்டாலின்

image

தங்கம் விலை ஒரு நாளைக்கு 2 முறை ராக்கெட் வேகத்தில் உயர்வதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைமாமணி விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், தங்கத்தை விட தமிழக அரசு வழங்கும் தங்கப் பதக்கத்துக்கு மதிப்பு அதிகம் என்று கூறினார். விருது அறிவிக்கும் போது இருந்த தங்கத்தின் விலையை விட, அதை வழங்கும்போது அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்விருது பெறுபவர்களுக்கு 3 சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

News October 11, 2025

TVK மா.செயலாளருக்கு அக்.14 வரை நீதிமன்ற காவல்

image

TVK கரூர் மா.செயலாளர் மதியழகனை அக்.14 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. TVK கூட்ட நெரிசலில் ஏற்பட்ட பலி தொடர்பாக மதியழகன் கைது செய்யப்பட்டார். கடந்த 30-ம் தேதி முதல் நீதிமன்ற காவலில் இருந்த அவர், 2 நாள் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை காவலில் இருந்தார். விசாரணை காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

News October 11, 2025

ரோஹித் இனி அதிரடி காட்டுவார்: ஆஸி., வீரர்

image

ஆஸி.,க்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியா, அக்.19-ல் 3 போட்டிகள் கொண்ட ODI தொடரில் விளையாடுகிறது. இதில் கேப்டனாக ரோஹித் விளையாடாத நிலையில், அவருக்கான சுமை குறைந்திருக்கும், எனவே அவர் மைதானத்தில் அதிரடியாக விளையாடுவார் என்று ஆஸி.,ன் பிராட் ஹாடின் தெரிவித்துள்ளார். சிறந்த வீரர்களான விராட், ரோஹித் இருவரும் ஆஸி.,க்கு வந்து கடைசியாக ஒருமுறை விளையாட இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!