News October 11, 2025

TVK மா.செயலாளருக்கு அக்.14 வரை நீதிமன்ற காவல்

image

TVK கரூர் மா.செயலாளர் மதியழகனை அக்.14 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. TVK கூட்ட நெரிசலில் ஏற்பட்ட பலி தொடர்பாக மதியழகன் கைது செய்யப்பட்டார். கடந்த 30-ம் தேதி முதல் நீதிமன்ற காவலில் இருந்த அவர், 2 நாள் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை காவலில் இருந்தார். விசாரணை காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

Similar News

News December 10, 2025

ஜூனியர் ஹாக்கி: ஜெர்மனி சாம்பியன்

image

சென்னையில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி மகுடம் சூடியுள்ளது. இறுதிப்போட்டியில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமன் ஆனது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஜெர்மனி சாம்பியனானது. தொடரை சிறப்பாக நடத்திய TN விளையாட்டுத்துறையை பலரும் பாராட்டுகின்றனர்.

News December 10, 2025

ராசி பலன்கள் (11.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News December 10, 2025

பெற்றோர்களே இதை கவனியுங்க!

image

குழந்தைகளிடையே சமூக ஊடகங்களின் பயன்பாடு, அவர்களை வெகுவாக பாதிக்கும் என்று ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களால் நீண்ட நேரம் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும் என்றும், ADHD போன்ற அறிகுறிகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், குழந்தைகளின் திரை நேரத்தைக் குறைப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது.

error: Content is protected !!