News March 29, 2025

சு.வெங்கடேசன் எம்பியின் தந்தை உடல் தகனம்

image

மதுரை எம்பி சு.வெங்கடேசனின் தந்தையும், சிபிஎம் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்புராம் (76), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் அன்னாரது இறுதி நிகழ்ச்சி ஹார்விபட்டியில் உள்ள இல்லத்தில் நடந்தது. இதையடுத்து அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. RIP

Similar News

News April 1, 2025

சென்னை கார் ஆலையை கைப்பற்றிய ரெனால்ட்

image

பிரான்ஸின் ரெனால்ட், ஜப்பானின் நிசானுடன் இணைந்து சென்னை ஒரகடத்தில், ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா என்ற கார் உற்பத்தி ஆலையை தொடங்கின. இதில் நிசான் நிறுவனத்திற்கு சொந்தமான 51% பங்குகளை ரெனால்ட் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், அந்த ஆலை ரெனால்ட்டுக்குச் சொந்தமானதாக மாற உள்ளது. இருப்பினும், புதிய நிசான் கார் மாடல்களை இந்த ஆலை தொடர்ந்து உற்பத்தி செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News April 1, 2025

பாலியல் வக்கிர கணவனை மாட்டிவிட்ட மனைவி

image

நாக்பூரில் பல பெண்களிடம் தவறாக நடந்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த கணவனை, அவரது மனைவி போலீஸில் போட்டுக் கொடுத்துள்ளார். கணவனின் நடத்தையில் சந்தேகம் வரவே, அவரது வாட்ஸ்அப்பை ஹேக் செய்த போது மனைவிக்கு இது தெரியவந்துள்ளது. மேலும், தனது கணவனால் பாதிக்கப்பட்ட 19 வயது பெண்ணையும் புகாரளிக்க வைத்துள்ளார். ஆபாசப் படங்களில் வருவது போல் செயல்பட சொல்லி தன்னையும் வற்புறுத்தியதாக மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

News April 1, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 223 ▶குறள்: இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. ▶பொருள்: ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.

error: Content is protected !!