News May 16, 2024
கெஜ்ரிவால் உதவியாளர் தாக்கியது குறித்து எம்பி புகார்

கெஜ்ரிவாலின் உதவியாளர் தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து அவரின் இல்லத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரித்தனர். அப்போது 2 பக்க விரிவான புகாரை ஸ்வாதி மாலிவால் அளித்ததாகக் கூறப்படுகிறது.
Similar News
News December 13, 2025
தவெகவின் தலைமையை ஏற்கும் கட்சிகள் இவை தானா?

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை தவெக தீவிரப்படுத்தியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், அமமுக மற்றும் புதிய தமிழகம் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தேமுதிக, பாமக (அன்புமணி தரப்பு) கட்சிகளுடனும் ரகசிய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுவிட்டதாம். கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 13, 2025
ஆட்டத்தை தொடங்கினார் செங்கோட்டையன்

2026 தேர்தலில் விஜய் தலைமையில் கூட்டணி அமைக்கும் பணிகளை தவெக முடுக்கிவிட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கான சிறப்புக் குழு நேற்று அமைக்கப்பட்ட நிலையில், விஜய்யை CM வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார். பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்டவை தற்போதுவரை கூட்டணியை உறுதி செய்யவில்லை. அக்கட்சிகளை இழுக்க காய் நகர்த்தி வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News December 13, 2025
தொடரும் வேட்டை.. 10 மாவோயிஸ்ட்கள் சரண்

2026 மார்ச் 31-க்குள் நாட்டில் இருந்து மாவோயிஸ்ட்களை அகற்ற மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக, சத்தீஸ்கரில் நேற்று 6 பெண்கள் உள்பட 10 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர். இவர்களைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ₹33 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 11 மாதங்களில், சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் மட்டும் 1,514 பேர் சரணடைந்துள்ளனர்.


