News March 28, 2024

நாளை வெளியாகும் திரைப்படங்கள்

image

▶ஸ்வதேஷ் இயக்கத்தில் ஓவியா, ரோபோ ஷங்கர், சேஷு நடித்துள்ள ‘பூமர் அங்கிள்’. ▶விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி நடித்துள்ள ‘ஹாட்ஸ்பாட்’. ▶நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘கா’. ▶பாலாஜி மாதவன் இயக்கியுள்ள ‘இடி மின்னல் காதல்’. ▶’வெப்பம் குளிர் மழை’, ▶’நேற்று இந்த நேரம், ▶’தி பாய்ஸ்’ உள்ளிட்ட 7 படங்கள் நாளை திரைக்கு வரவுள்ளன.

Similar News

News January 9, 2026

டைஃபாய்டு காய்ச்சல் வர என்ன காரணம்?

image

<<18811832>>டைஃபாய்டு <<>>காய்ச்சல் என்பது ‘சால்மோனெல்லா டைஃபி’ (எஸ். டைஃபி) என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோயாகும். இது சிறுகுடலை பாதித்து அதிக காய்ச்சல், வயிற்று வலி உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. சுகாதாரமற்ற உணவு, கழுவப்படாத பழங்கள் & காய்கறிகள் மற்றும் அசுத்தமான குடிநீரை குடிப்பது உள்ளிட்டவை டைஃபாய்டு பரவலுக்கான முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, உணவு, குடிநீரில் அதிக கவனம் செலுத்துங்கள் மக்களே!

News January 9, 2026

BREAKING: யாருடன் கூட்டணி.. முடிவை சொன்ன பிரேமலதா

image

யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுத்துவிட்டேன் என்று கடலூர் மாநாட்டில் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுவரை எந்த கட்சியும் கூட்டணியை அறிவிக்கவில்லை. அப்படி இருக்கையில், தேமுதிக மட்டும் கூட்டணி அறிவிப்பை இன்றே வெளியிட வேண்டுமா என தொண்டர்களிடம் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பலரும், வேண்டாம்! வேண்டாம் ! என முழக்கம் எழுப்பினர். உடனே, கூட்டணி குறித்து பின்னர் அறிவிப்பதாக சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

News January 9, 2026

காணாமல் போன போன், அடுத்து நடந்ததை பாருங்க!

image

மொபைல் போனை தொலைத்துவிட்டால், அதை மீண்டும் கண்டுபிடிப்பது கடினம் என்றுதான் நினைப்போம். அப்படித்தான், பெங்களூருவில் போனை தொலைத்துவிட்ட கல்லூரி மாணவி ஒருவர், எதற்கும் இருக்கட்டுமே என்று போலீஸின் ‘112’ நம்பருக்கு போன் செய்து புகாரளித்தார். அட, என்ன ஆச்சரியம்! 8 நிமிடத்தில் அங்குவந்த போலீஸ், GPS உதவியுடன் உடனே போனை கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளனர். ஆகவே, போன் தொலைந்தால் புகார் அளிக்க தயங்காதீர்.

error: Content is protected !!