News April 23, 2025
அமைச்சர் பதவியா? ஜாமினா? செந்தில் பாலாஜிக்கு செக்

அமைச்சர் பதவி வேண்டுமா?, ஜாமின் வேண்டுமா என செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் செக் வைத்துள்ளது. அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அமைச்சர் பதவியா? ஜாமினா? என்பதை (இரண்டில் ஒன்று) திங்கட்கிழமை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனால், செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News April 11, 2026
தமிழிசைக்கு கவர்னர் பதவி தான் சரியா இருக்கும்: உதயநிதி

EPS-ஐ பத்து தோல்வி பழனிசாமி என அழைப்பதை போல, இங்கு 6 தோல்வி தமிழிசை இருக்கிறார் என உதயநிதி விமர்சித்துள்ளார். மயிலாப்பூரில் பிரசாரம் செய்த அவர், தெற்கு, வடக்கு என எல்லா இடங்களிலும் போட்டியிட்டு மக்கள் தன்னை வெற்றி பெற வைப்பார்களா என்று பார்க்கிறார். ஆனால் மக்கள் அவரை தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர் என்றார். அவருக்கு கவர்னர் பதவிதான் சரியாக இருக்கும். எனவே அவரை தோற்கடிக்க வேண்டும் என கூறினார்.
News April 11, 2026
ஃபிட்னஸ் வேறு ஆரோக்கியம் வேறு

உடல் ஃபிட்டாக இருப்பதையும் ஆரோக்கியமாக இருப்பதையும் ஒன்று என பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. நல்ல தூக்கம், சீரான உணவு, குறைந்த மன அழுத்தம் ஆகியவை ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றன. பளு தூக்குவது, வேகமாக ஓடுவது ஆகியவை உடற்தகுதிக்கான உதாரணங்கள். ஒரு பாடி பில்டர் பார்ப்பதற்கு நல்ல உடற்தகுதியுடன் இருந்தாலும், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று சொல்லமுடியாது.
News April 11, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 11, பங்குனி 28 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 5:15 PM – 6:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: நவமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.


