News April 23, 2025
ரேஷன் கடைகள் முன்பு நிழல் கூரை: அமைச்சர் அறிவிப்பு

அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் நிழல் கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் மக்கள் வரிசையில் நிற்கையில், வெயிலில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சக்கரபாணி, மரங்கள் நடவும், நிழல் கூரை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Similar News
News July 9, 2025
ரஷ்ய அமைச்சர் தற்கொலை.. விசாரணைக்கு பயந்தாரா?

ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் Roman V. Starovoyt தற்கொலை செய்தது குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சராகும் முன்பு குர்ஸ்க் பிராந்திய ஆளுநராக அவர் பதவி வகித்தார். இந்நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளார். குர்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த நிதிமுறைகேடு குறித்து விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
News July 9, 2025
காரைக்காலில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலில் 4 நாள்கள் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை சப்பர வீதி உலா, மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனால் காரைக்கால் பிராந்தியத்தில் நாளை மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் நாளை அங்கு செயல்படாது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
டெஸ்ட் தரவரிசை: மேல ஏறி வரும் சுப்மன் கில்!

ENG பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 886 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 2-வது இடத்தில் ENG-ன் ஜோ ரூட், 3-வது இடத்தில் NZ-ன் கேன் வில்லியம்சன் ஆகியோர் உள்ளனர். அதே நேரத்தில், இந்திய கேப்டன் கில் 15 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை(807 புள்ளிகள்) பிடித்துள்ளார். ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும், ரிஷப் பண்ட் 8-வது இடத்திலும் உள்ளனர்.