News April 18, 2024
மன்சூர் அலிகானின் உடல்நிலை முன்னேற்றம்

குடியாத்தத்தில் நேற்று தேர்தல் பரப்புரையின்போது நடிகர் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Similar News
News January 27, 2026
பெண் வடிவத்தில் அனுமன் இருக்கும் கோயில்?

சத்தீஸ்கரின் ரத்தன்பூர் மாவட்டத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது ரத்தன்பூர் மன்னர் பிருத்வி தேவ்ஜுவால் கட்டப்பட்டது. மன்னரின் கனவில் தோன்றிய அனுமன், அருகே இருக்கும் நீர்த்தேக்கத்தில் இருக்கும் சிலையை எடுத்து வந்து கோயிலை கட்டி பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறினாராம். அங்கு பெண் வடிவிலான சிலை கிடைத்த போதிலும், மன்னர் கோயிலை கட்டியுள்ளார். அப்படித்தான் ‘மாதா அனுமன்’ தோன்றியதாகக் கூறப்படுகிறது.
News January 27, 2026
FLASH: இன்று விடுமுறை!

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இன்று நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது என வங்கி ஊழியர்கள் சங்கம்(AIBEA) தெரிவித்துள்ளது. போராட்டத்தின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் AIBEA வேண்டுகோள் விடுத்துள்ளது. LIC-ல் 100% அந்நிய முதலீடு, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் நடத்தும் இந்த போராட்டத்தால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.
News January 27, 2026
தென் கொரியாவுக்கு டிரம்ப் வைத்த செக்!

தென் கொரிய இறக்குமதிகளுக்கான வரிகளை 25% ஆக உயர்த்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்தாண்டு எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை சியோல் நிறைவேற்றத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஒப்பந்தத்தின்படி வரிகளை குறைக்க நாங்கள் விரைவாக செயல்பட்டோம் என்றும், ஆனால் தென் கொரிய பார்லிமெண்ட் உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் காட்டி வருகின்றனர் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


