News September 27, 2024
கட்டுக்கட்டாக பணத்தை எண்ணும் பணி தீவிரம்

ATM கொள்ளையர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சூரில் கொள்ளை நடந்தவுடன் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக திருச்சூர் எஸ்பி இளங்கோ கூறினார். நாமக்கல் அருகே பிடிபட்டவர்கள் ஹரியானாவின் <<14207793>>மேவாட் கொள்ளைக் கும்பல்<<>>, தென்னிந்தியாவில் 6 மாதங்களில் 15க்கும் மேற்பட்ட ATMகளில் கைவரிசை காட்டியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 11, 2025
ஏற்ற இறக்கத்தில் தங்கம்.. வல்லுநர்கள் சொல்வது என்ன?

ஜூலை மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. கடந்த 1-ம் தேதி சவரனுக்கு ₹840 அதிகரித்து மாதத்தின் வர்த்தகத்தைத் தொடங்கியது. ஆனால், சர்வதேச சந்தையில் நிலவும் மந்த நிலை காரணமாக, இந்த மாதம் <<17027983>>10 நாள்களை கடந்தும்<<>> கடந்த மாத இறுதி விலை நிலவரமே நீடிக்கிறது. மேலும், ஆடி மாதம் பிறந்த பிறகு தங்கம் விற்பனை சரியும் என்பதால் விலையும் சரிய வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News July 11, 2025
மலை, காடு, கடல்.. மனதை நனைக்கும் ஒரு ரோடு!

சாலை பயணங்கள் தரும் அனுபவம் அளப்பறியது. மரங்களால் சூழப்பட்ட காடுகளும், மழையில் நனைந்த பசுமை மலைச்சுரங்கங்களும், கண்களை பறிக்கும் கடலின் அழகுடன் பயணிக்கும் போது, உண்டாகும் உற்சாகத்திற்கு ஈடு இணையில்லை. அலைகளின் இசை, காற்றின் சுழலும் மனதை வருடும். இந்தியாவில் மனதை மயக்கும் டாப் 6 Road Journey-ஸை லிஸ்ட் போட்டுள்ளோம். நீங்களும் ஒரு ட்ரிப் போய் பாருங்க!
News July 11, 2025
மீண்டும் காப்பிரைட் கேட்கும் இளையராஜா

Mrs & Mr படம் இன்று வெளியாகியுள்ளது. வனிதா விஜயகுமார் இயக்கி நடித்திருக்கும் இப்படத்தில் ‘ராத்திரி சிவராத்திரி’ என்ற மைக்கேல் மதன காமராஜன் படத்தில் உள்ள பாடல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இப்பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் சென்னை HC-ல் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்வழக்கு திங்கள்கிழமை விசாரிக்கப்படும் என கோர்ட் தெரிவித்துள்ளது.