News August 4, 2024

போலீஸ் எனக்கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் கைது

image

ஒடிசாவில் போலீஸ் எனக்கூறி, 5 பெண்களை திருமணம் செய்த சத்யஜித் சமால் (34) என்பவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரையடுத்து, ஒரு பெண் அதிகாரியை பயன்படுத்தி, சமாலை பிடித்துள்ளனர். 6வது திருமணத்திற்காக பெண் அதிகாரியை பார்க்க வந்தபோது, அவர் கையும் களவுமாக பிடிபட்டார். சமாலிடமிருந்து கார், பைக், பல லட்சம் பணம், துப்பாக்கி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News

News February 19, 2026

யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்?

image

தேர்தல் நெருக்கத்தில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார் <<19183110>>பண்ருட்டி ராமச்சந்திரன்.<<>> TN-ன் மூத்த அரசியல்வாதியான இவர் (88 வயது) முதல்முறையாக 1967-ல் திமுக சார்பில் பண்ருட்டியில் வென்றார். பின்னர் கருணாநிதி, எம்ஜிஆர் ஆட்சிகளில் 4 முறை அமைச்சராக இருந்தவர், 2005 – 2013 வரை தேமுதிக அவை தலைவராகவும் பதவி வகித்தார். கடந்த சில ஆண்டுகளாக OPS-க்கு ஆதரவளித்து வந்த அவர், தற்போது புதிய கட்சிக்கு நகர்ந்துள்ளார்.

News February 19, 2026

தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) மீண்டும் 5,000 டாலர்களை கடந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து 1 அவுன்ஸ் 79 டாலர்களை தொட்டுள்ளதால் வரும் நாள்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமாக உயரக்கூடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்திய சந்தையில் இன்று(பிப்.19) <<19181398>>தங்கம் விலை ₹2,160<<>>, வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 அதிகரித்தது கவனிக்கத்தக்கது.

News February 19, 2026

திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக… EPS ரியாக்சன்

image

எந்த கூட்டணியில் இணையும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த தேமுதிக இறுதியாக திமுக கூட்டணியில் இன்று இணைந்துள்ளது. இதுகுறித்து EPS-யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ’இருங்க… சட்டமன்றத்திற்கு சென்று வந்த பின் பேசுகிறேன்’ எனக்கூறி அங்கிருந்து சென்றார். அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் இணைவார் என பேசப்பட்டு வந்த நிலையில் பிரேமலதா ட்விஸ்ட் அடித்துவிட்டார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

error: Content is protected !!