News March 19, 2024
நல்ல கதைக்காக காத்திருக்கும் மமிதா பைஜு

மலையாளத்தில் மிகக் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரேமலு’ ₹100 கோடி வசூல் செய்ததைக் கண்டு மொத்தத் தமிழ்த் திரையுலகமும் மிரண்டுபோயிருக்கிறது. அந்தப் படத்தின் நாயகி மமிதா பைஜுவுக்குக் கோடம்பாக்கத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து பல அழைப்புகள் போயிருக்கின்றதாம். கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தும் அவர், எந்தப் படத்திலும் கமிட் ஆகாமல் நல்ல கதைக்காக காத்திருப்பதாக தெரிகிறது.
Similar News
News July 11, 2025
வைகோ அல்ல ‘பொய்கோ’: வைகைச்செல்வன் விளாசல்

திருச்சி திமுக மாநாட்டிற்குச் செல்லாமல், போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்ததே அரசியல் வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு என <<17024276>>வைகோ<<>> பேசியிருந்தார். இந்நிலையில், மதிமுகவின் பம்பரம் சின்னத்திற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தர உழைத்தது அதிமுக என்பதை அவர் மறந்திடக்கூடாது என வைகைச்செல்வன் கூறியுள்ளார். அவர் வைகோ அல்ல, ‘பொய்கோ’ என்றே அழைக்க வேண்டும் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
News July 11, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹440 உயர்வு

சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூலை 11) சவரனுக்கு ₹440 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் 1 கிராம் ₹9,075-க்கும், சவரன் ₹72,600-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹160 அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹121-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,21,000-க்கும் விற்பனையாகிறது.
News July 11, 2025
கடலூர் கோர விபத்து: மூவர் குழு விசாரணை துவக்கம்

கடலூர் அருகே பள்ளிவாகனம் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தெற்கு ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி திருச்சியில் விசாரணையை துவக்கியுள்ளது. ரயில் வருவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதா? ரயில் கடந்த போது ரகசிய குறியீட்டு எண்கள் கொடுக்கப்பட்டதா என பல கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பதிவுசெய்யப்படுகின்றன.