News March 20, 2024
அடிக்கடி தவறு செய்யுங்கள்!

அடிக்கடி தவறு செய்யுங்கள். ஆனால் செய்த தவறையே அடிக்கடி செய்ய கூடாதென இளம் தொழில்முனைவோருக்கு OYO சி.இ.ஓ ரிதேஷ் அகர்வால் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில், ‘எந்த பின்புலமும் இல்லாமல் தொழில் தொடங்கிய எனது அனுபவத்திலிருந்து இளம் தொழில்முனைவோர் விரைவாக கற்றுக்கொள்ள முடியும். ஸ்டார்ட் அப் சமூகத்திற்கு மேலும் பலவற்றைக் கொடுப்பதில் எப்போதும் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.
Similar News
News January 21, 2026
30 நிமிடம் நடந்தால் இவ்வளவு நன்மைகளா?

நடப்பது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது. மேலும் இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை நீக்க உதவுவதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர். தினமும் 8,000 – 10,000 அடிகள் நடப்பதன் மூலம் 400 – 500 கலோரிகளை எரிக்க முடியும். காலை, மதியம், மாலை என்று பிரித்துக்கூட 30 நிமிடங்கள் நடக்கலாமாம். ஆனால் வழக்கத்தைவிட சற்று வேகமாக நடப்பது அதிக கலோரிகளை எரிக்க உதவுமாம்.
News January 21, 2026
14 மாவட்டங்களில் புதிய டைட்டில் பூங்காக்கள்

நேற்று சட்டபேரவையில் ஆளுநர் ரவி உரையில், தமிழ்நாட்டில் மேலும் 14 மாவட்டங்களில் புதிய டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் நிறுவப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாவட்டங்கள்: மதுரை, திருச்சி, ஓசூர், காரைக்குடி, விருதுநகர், நெல்லை, குமரி, ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை கரூர், ஊட்டி, நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகியவை. ஏற்கெனவே 7 மாவட்டங்களில் டைடல் பூங்கா நிறுவப்பட்டுள்ளது.
News January 21, 2026
சாப்பிடும்போது பேசுகிறீர்களா? இது உங்களுக்குதான்!

சாப்பிடும்போது பேசுவது செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாய் வழியாக வயிற்றில் அதிகப்படியான காற்று நுழைவது ஏப்பம் மற்றும் வாயு பிரச்னைகளை ஏற்படுத்தும். உணவு, உணவுக்குழாயில் செல்வதற்கு பதிலாக மூச்சுக்குழாய்க்குள் சென்று கடுமையான இருமலை ஏற்படலாம். சரியாக மெல்லாததால், செரிமான சாறுகள் உணவில் கலக்காமல், அமிலத்தன்மை பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.


