News March 20, 2024
அடிக்கடி தவறு செய்யுங்கள்!

அடிக்கடி தவறு செய்யுங்கள். ஆனால் செய்த தவறையே அடிக்கடி செய்ய கூடாதென இளம் தொழில்முனைவோருக்கு OYO சி.இ.ஓ ரிதேஷ் அகர்வால் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில், ‘எந்த பின்புலமும் இல்லாமல் தொழில் தொடங்கிய எனது அனுபவத்திலிருந்து இளம் தொழில்முனைவோர் விரைவாக கற்றுக்கொள்ள முடியும். ஸ்டார்ட் அப் சமூகத்திற்கு மேலும் பலவற்றைக் கொடுப்பதில் எப்போதும் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.
Similar News
News October 31, 2025
காதல் கைகூட செய்ய வேண்டிய வழிபாடு!

நம் வாழ்வின் தேவைகளை கடவுளிடம் வேண்டிப் பெறுவது போலக் காதலையும் வேண்டிப்பெறலாம். காதல் கைகூட காதற் கடவுளர்களான ரதி – மன்மதனை வணங்க வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள மன்மதனின் சிலைக்கு பெண்களும், ரதியின் சிலைக்கு ஆண்களும் அபிஷேகம் செய்து வழிபட, காதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
News October 31, 2025
3 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதால் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். சென்னை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மழை விடுமுறையை ஈடுசெய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் முழுநேரம் இயங்குவது குறிப்பிடத்தக்கது.
News October 31, 2025
உங்கள் குழந்தை மண் சாப்பிடுதா? இதான் காரணம்!

கையில் கிடைப்பதை வாயில் போடும் பழக்கம் குழந்தைகளிடம் இருக்கும். அப்படி வாயில் போடும் பொருளில் சுவை இல்லை என தெரிந்தால் அதனை மீண்டும் செய்யாது. ஆனால் சில குழந்தைகள் மட்டும் மண், சாம்பலை அடிக்கடி உண்ணும். அப்படி செய்தால், உங்கள் குழந்தைக்கு வயிற்றில் பூச்சி தொல்லை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்த சோகை இருக்கலாம் என டாக்டர்கள் சொல்றாங்க. உடனடியாக டாக்டரை அணுகுங்கள். குழந்தைகளை காக்கும், SHARE THIS.


