News August 24, 2025
வரலாறு காணாத வசூல் செய்த மஹா அவதார் நரசிம்மா

மஹா அவதார் நரசிம்மா திரைப்படத்தின் வசூல் குறித்து hombale films அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 5வது வாரத்திற்குள் நுழையும் மஹா அவதார் நரசிம்மா திரைப்படம் இதுவரை உலகளவில் ₹278 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் வெளிவந்த ஒரு அனிமேஷன் திரைப்படத்தின் வரலாறு காணாத வசூல் சாதனை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 24, 2025
பயங்கரவாத அமைப்பின் பிடியில் 215 பள்ளிகள்

ஜம்மு – காஷ்மீரில் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பின் அறக்கட்டளைக்கு சொந்தமான 215 பள்ளிகளை அந்த யூனியன் பிரதேச அரசு கைப்பற்றியுள்ளது. இந்த பள்ளிகள் 10 மாவட்டங்களில் உள்ளதால், சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் இதனை பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு சுமார் 51,000 மாணவர்கள் பயின்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 24, 2025
ஆகஸ்ட் 24: வரலாற்றில் இன்று

*2006 – புளூட்டோ ஒரு கோள் அல்ல, அது குறுங்கோள் என அறிவிக்கப்பட்டது.
*1891 – தாமஸ் ஆல்வா எடிசன் ஃபிலிம் கேமராக்களுக்கான காப்புரிமைப் பெற்றார்.
*1991 – உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி தனி நாடானது.
*1995 – வின்டோஸ் 95 வெளியிடப்பட்டது.
*1947 – பிரேசில் எழுத்தாளர் பவுலோ கோய்லோ பிறந்ததினம்.
News August 24, 2025
குண்டாக உள்ளவர்களே இங்கு ஹீரோ..!

ஸ்லிம்மாக இருப்பதை ஃபிட் என நினைக்கிறோம். ஆனால் எத்தியோப்பியாவில் உள்ள போடி பழங்குடியினர் குண்டாக இருப்பதை பெருமையாக கருதுகின்றனர். இதற்காக போட்டியும் நடத்துகின்றனர். இதில் பங்கேற்கும் இளைஞர்கள் 6 மாதங்கள் வேலைக்கு செல்லாமல் சாப்பிட்டுவிட்டு வீட்டிலேயே இருப்பார்களாம். போட்டியின் அன்று யார் அதிக எடை கூடியிருக்கிறார்களோ அவரே ஹீரோ. அங்குள்ள பெண்களும் குண்டான இளைஞர்களையே விரும்புகிறார்களாம்.