News October 1, 2025
அப்பா ஆனார் மேக்னஸ் கார்ல்ஸன்❤️❤️

தந்தையை போல் தனயன் என்பதற்கு மேலே உள்ள படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்ஸன், எல்லா விக்டோரியா தம்பதிக்கு கடந்த செப்.27-ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. இருவரும் ஒன்றாக தூங்கும் படத்தை அவர் SM-ல் பதிவிட்ட நிலையில், பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலர் உங்களை வீழ்த்துவதே கடினமாக உள்ளது, அதற்குள் மற்றொரு போட்டியாளரா என நகைச்சுவையாக கூறியுள்ளனர்.
Similar News
News October 1, 2025
12வது போதும்.. RRB-ல் 2424 காலியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2424 Commercial – Ticket Clerk பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12வது தேர்ச்சி பெற்ற 18- 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 4 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு ₹21,700 சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 21-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News October 1, 2025
சற்றுமுன்: பிரபலம் காலமானார்

ரிசர்வ் வங்கி ex கவர்னர் ரகுராம் ராஜனின் தந்தையும், ஓய்வுபெற்ற மூத்த உளவுத்துறை அதிகாரியுமான ஆர்.கோவிந்தராஜன் (94), வயது மூப்பு காரணமாக காலமானார். 1953-ல் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர், இந்திய உளவுத் துறையில் (ரா) இணைந்து, அதன் Joint Intelligence Committee-யின் தலைவராக உயர்ந்தார். தேசத்தின் பாதுகாப்பில் முக்கிய பணியாற்றிய அன்னாரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News October 1, 2025
டெல்லி சென்றார் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தனி விமானத்தில் டெல்லிக்கு சென்றுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தனது வழக்கறிஞர்கள் குழுவோடு அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் தேசிய விளையாட்டு போட்டிகள் காரணமாக டெல்லி சென்றதாக தவெக தரப்பில் கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய ட்வீட் தொடர்பாக அவர் கைதாவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டெல்லி சென்றுள்ளார்.