News October 1, 2025

12வது போதும்.. RRB-ல் 2424 காலியிடங்கள்!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2424 Commercial – Ticket Clerk பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12வது தேர்ச்சி பெற்ற 18- 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 4 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு ₹21,700 சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 21-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். SHARE IT.

Similar News

News December 13, 2025

பாமகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக

image

ராமதாஸ், அன்புமணி என 2 தரப்புகளிடம் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியதாக கூறப்படுகிறது. பாமக வாக்குகள் பிரிந்துவிடாமல் தடுக்க, இருவரையும் சமாதானப்படுத்தி ஒரே சின்னத்தில் போட்டியிட செய்ய அதிமுக விரும்புகிறதாம். இதற்காக இருதரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 50%-ஐ ராமதாஸ் கேட்கும் நிலையில், 75%-ஐ கேட்டு அன்புமணி முரண்டு பிடிக்கிறாராம்.

News December 13, 2025

கேரளாவில் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் இடையே இழுபறி!

image

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி(LDF), கேரளா ஐக்கிய ஜனநாயக முன்னணி(UDF) இடையே கடும் போட்டி நிலவுகிறது. காலை 9 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் LDF 3 இடங்களிலும், UDF 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. 87 நகராட்சிகளில் UDF-45, LDF-32, NDA-2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

News December 13, 2025

டெல்லி விரைந்த நயினார்.. மீண்டும் இணைகிறாரா OPS?

image

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நயினார் சற்றுமுன் டெல்லி புறப்பட்டு சென்றார். டிச.15-ம் தேதி சென்னை வரும் அமித்ஷா முன்னிலையில், TTV, OPS-ஐ மீண்டும் NDA கூட்டணியில் இணைப்பது குறித்து, நேற்று முன்தினம் EPS உடன் நயினார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்க இன்று டெல்லி விரைந்துள்ளார்.

error: Content is protected !!