News October 1, 2025
OTT-யில் வெளியானது ’மதராஸி’

ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் ‘மதராஸி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ருக்மிணி வசந்த், வித்யூத் ஜம்வால் ஆகியோர் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படத்திற்கு கலவையான விமர்சனங்களை வந்திருந்தாலும், பாக்ஸ் ஆபிசில் ₹100 கோடி வசூலை கடந்தது. இந்நிலையில், அக்டோபர் 1-ம் தேதியான இன்று அமேசான் ப்ரைம் OTT-ல் வெளியாகி உள்ளது.
Similar News
News October 1, 2025
Cup வேணும்னா ஆஃபீசுக்கு வா: SKY-ஐ சீண்டிய ACC தலைவர்

Asia Cup டிராபியை ACC தலைவர் மோசின் நக்வி எடுத்துச்சென்ற சம்பவம் பேசுபொருளானது. இந்நிலையில் அந்த டிராபியை இந்தியாவிடம் கொடுக்க தயார் என அவர் கூறியுள்ளார். ஆனால் அதற்கு ஒரு விழாவை நடத்த வேண்டும் எனவும், அதில் இந்திய வீரர்கள் தன் கையால் டிராபியை வாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இல்லையெனில் தன்னுடைய அலுவகத்துக்கு வந்து டிராபியை SKY பெற்றுக்கொள்ளட்டும் எனவும் கூறியுள்ளார்.
News October 1, 2025
பிஹார் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சிறப்பு தீவிர திருத்த நடைமுறைக்கு பின் பிஹாரில் இறுதி வாக்காளர் பட்டியலை ECI வெளியிட்டுள்ளது. அதன்படி ஒட்டுமொத்தமாக 68.5 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் கூடுதலாக 3.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 21.53 லட்சம் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மொத்தத்தில் 47 லட்சம் பெயர்கள் குறைந்துள்ளன.
News October 1, 2025
BREAKING: கரூர் துயரம்.. சற்றுநேரத்தில் கைது

தவெக பொதுச் செயலாளர் N.ஆனந்த், CTR நிர்மல்குமாரை கைது செய்ய போலீசார் தீவிரமாகியுள்ளனர். விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், இருவருக்கும் முன் ஜாமின் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஏற்காட்டில் உள்ள மலை கிராமத்தில் இருக்கும் அவர்களை கைது செய்ய ஏடிஎஸ்பி பிரேமானந்தன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் இருவரும் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது