News October 1, 2025

OTT-யில் வெளியானது ’மதராஸி’

image

ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் ‘மதராஸி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ருக்மிணி வசந்த், வித்யூத் ஜம்வால் ஆகியோர் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படத்திற்கு கலவையான விமர்சனங்களை வந்திருந்தாலும், பாக்ஸ் ஆபிசில் ₹100 கோடி வசூலை கடந்தது. இந்நிலையில், அக்டோபர் 1-ம் தேதியான இன்று அமேசான் ப்ரைம் OTT-ல் வெளியாகி உள்ளது.

Similar News

News December 5, 2025

எறும்புகளுக்கு சர்க்கரை நோய் வரலையே எப்படி?

image

சொல்லப்போனால் மனிதர்களை விட எறும்புகள்தான் அதிகமாக சர்க்கரை சாப்பிடுகின்றன. ஆனால் அவற்றுக்கு சர்க்கரை நோய் வருவதே இல்லை. காரணம், அவற்றின் உடல் அமைப்பு சர்க்கரையை உடனுக்குடன் குளுக்கோஸாக மாற்றி எனர்ஜியாக கன்வர்ட் செய்கிறது. இந்த எனர்ஜியை பயன்படுத்தியே எறும்புகள் எப்போதும் சுறுசுறுப்பாக உழைக்கின்றன. தேவைக்கேற்ப சர்க்கரை எடுத்துக்கொண்டு சுறுசுறுப்பாக இயங்கினால் நமக்கும் பிரச்னை இல்லை. SHARE.

News December 5, 2025

டெல்லி வரை சென்றும் வாய் திறக்காத விஜய்

image

சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தீவிரமாகியுள்ளது திருப்பரங்குன்றம் விவகாரம். ஆனால், இதுவரை விஜய்யின் தவெக தரப்பில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருப்பது பேசுபொருளாகியுள்ளது. பொதுக்கூட்ட பணியில் பிஸியாக இருக்கும் தவெக தலைமை, தமிழகத்தின் தற்போதைய சமூக பிரச்னைக்கு குரல் கொடுக்குமா என்பதே விர்ச்சுவல் வாரியர்ஸின் எதிர்பார்ப்பாக உள்ளது. உங்கள் கருத்து என்ன?

News December 5, 2025

புடினுக்கான விருந்தில் சசி தரூர் IN.. ராகுல் OUT!

image

ஜனாதிபதி இல்லத்தில் இன்று இரவு ரஷ்ய அதிபருக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க ராகுல் காந்தி மற்றும் கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாம். மாறாக, காங்., MP சசிதரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திக்கும் மரபு, பாஜக ஆட்சியில் மீறப்படுவதாக ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார்.

error: Content is protected !!