News April 22, 2025
எம்.சாண்ட், கிரஷர் ஜல்லி ரூ.1,000 உயர்வு

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.சாண்ட், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனுடன் நேற்று அச்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், விலையை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, இன்று முதல் (ஏப்.22) எம்.சாண்ட், பி.சாண்ட், கிரஷர் ஜல்லி விலையை ₹1,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 11, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 11, ஆவணி 26 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை
News September 11, 2025
விரைவில் இந்தியாவில் கால் பதிக்கும் சீனாவின் BYD..!

சீனாவின் BYD நிறுவனம், இந்தியாவில் EV உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளது. மேலும், புதிய ரக EV SUV கார்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023-லேயே உற்பத்தி ஆலையை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரிய நிலையில், இந்தியா – சீனா உறவு விரிசலால், அது கிடப்பில் போடப்பட்டது. BYD வருகையால் டெஸ்லா, டாடா, மஹிந்திரா நிறுவனங்கள் அடிவாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 11, 2025
விஷால் கல்யாணம் முடிஞ்சா தான் எனக்கு கல்யாணம்..!

நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், நடிகர் விஷால் திருமணம் இந்தாண்டே நடக்கும் என அவரது பெற்றோர் கூறியுள்ளனர். இதனிடையே, பேச்சிலராக இருக்கும் அதர்வா விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என விஷால் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, விஷால் சார் எப்போது தாலி கட்டுகிறாரோ, அதன் பிறகு நான் தாலி கட்டுவேன் என ஜாலியாக அதர்வா பதிலளித்துள்ளார். பொண்ணு யாரா இருக்கும்?