News March 11, 2025
லிடியன் நாதஸ்வரம் விவகாரம்: இளையராஜா விளக்கம்!

லிடியன் நாதஸ்வரத்தை சிம்பொனி எழுத சொன்னதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா விளக்கமளித்துள்ளார். அதில், லிடியன் தன்னிடம் சிம்பொனி கம்போஸ் பண்ணதாக ஒரு டியூனை போட்டு காண்பித்ததாகவும், அது சிம்பொனி இல்லை, சினிமா பாடல் போல் உள்ளதாகத் தான் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், சிம்பொனி என்றால் என்னவென்று தெரிந்துவிட்டு, கம்போஸ் செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News March 11, 2025
இன்று மொரீஷியஸ் செல்கிறார் PM மோடி

2 நாள் பயணமாக PM மோடி இன்று மொரீஷியஸ் செல்கிறார். அந்நாட்டின் 57வது தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளார். இதுகுறித்து அவரது X பதிவில், எனது நண்பரும், பிரதமருமான டாக்டர் நவீன்சந்திர ராம்கூலமை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது பயணம் இருநாட்டு உறவுகளில் பிரகாசமான அத்தியாயத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 11, 2025
JEE மெயின் தேர்வு தேதிகள் அறிவிப்பு

JEE மெயின் தேர்வுகள் ஏப்.2ஆம் தேதி முதல் தொடங்கும் என NTA அறிவித்துள்ளது. முதல் தாள் தேர்வுகள் ஏப்.2, 3, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் காலை, மாலை என 2 கட்டங்களாக நடத்தப்படும். 8ம் தேதி பிற்பகல் மட்டுமே நடத்தப்படும். BARC இடங்களுக்கான தாள்-2A மற்றும் B-பிளானிங் இடங்களுக்கான தாள்-2B ஏப் .9 ஆம் தேதி காலை ஒரே கட்டமாக நடத்தப்படும். முதல் தாள் தேர்வு முடிவுகள் ஏப்.17ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும்.
News March 11, 2025
புதிய உச்சத்தில் கோதுமை உற்பத்தி

நடப்பாண்டில், இந்தியாவின் கோதுமை உற்பத்தி புதிய உச்சமாக 11.54 கோடி டன்னாக இருக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது அரசின் இலக்கான 11.50 கோடி டன்னை விட அதிகமாகும். 2024-25ஆம் ஆண்டில் காரீப், ராபி பருவ மொத்த உணவு தானியங்கள் உற்பத்தி 5% அதிகரித்து, 33.09 கோடி டன்னாக இருக்கும். இதில் காரிப் பயிர்கள் 16.64 கோடி டன்னாகவும், ராபி பயிர்கள் 16.45 கோடி டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.