News August 19, 2025
ஜான் பாண்டியன் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகிறது

அதிமுக கூட்டணியில் இருக்கும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படவுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தமமுக எந்த தேர்தலிலும் தனித்து போட்டியிடவில்லை. 2021-ல் ADMK கூட்டணியில் இரட்டை இலை சின்னத்திலும், 2024-ல் BJP கூட்டணியில் தாமரை சின்னத்திலும் ஜான்பாண்டியன் போட்டியிட்டார். இதனால், அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய EC முடிவு எடுத்துள்ளது.
Similar News
News December 9, 2025
கில்லர் லுக்கில் மிருணாள் தாக்கூர்

மிருணாள் தாக்கூர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள், ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதில் அவர், கருப்பு நிற உடை, மின்னும் காதணிகள், பிரகாசமான முகம், வசீகரமான பார்வை என மொத்தமாக ரசிகர்களை ஈர்க்கிறார். மிருணாளின் கில்லர் லுக் ஸ்டைலிஷ் போட்டோக்கள், உங்களுக்கும் பிடிச்சிருந்த ஒரு லைக் போடுங்க.
News December 9, 2025
இந்திய அணியில் தமிழக வீராங்கனை

இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணியில் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட 15 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக 17 வயதான TN வீராங்கனை ஜி.கமலினியும் அணிக்கு தேர்வாகியுள்ளார். இவர் ஏற்கெனவே WPL-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 9, 2025
சளி மற்றும் இருமலுக்கு வீட்டு வைத்தியம்

மழை மற்றும் குளிர்காலங்களில் சளி, இருமல் பாதிப்பு பெரும்பாலனவர்களுக்கு வரும். இதற்கு மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்வது சிறந்தது. இருப்பினும், சளி மற்றும் இருமலில் இருந்து உடலுக்கு புத்துணர்வு அளிக்க சில எளிய விஷயங்களை வீட்டிலேயே செய்யலாம். அவை என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


