News April 26, 2025

புதுச்சேரியில் மதுபான விலை உயருகிறது

image

புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் 2025-26ம் ஆண்டு பட்ஜெட் நலத்திட்டங்களுக்கு நிதி தேவைப்படுவதால், மதுபானம் மீதான கலால் வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த வரி உயர்வால், புதுச்சேரியில் மதுபான விலை கணிசமாக உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. புதுச்சேரி மது விலை குறைவு என்பதால், தமிழகத்தில் இருந்தும் பலர் அதை வாங்கி அருந்துவர். ஆதலால் மது பிரியர்களை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Similar News

News December 3, 2025

தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI-ல் இந்திய அணி இரண்டு ஓப்பனர்களையும் இழந்தது. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் 14 ரன்களுக்கும், ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கடந்த போட்டியில் சதம் அடித்த கோலி, ருதுராஜூடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டு வருகிறார். 12 ஓவருக்கு 77/2 என்ற நிலையில் இந்தியா விளையாடி வருகிறது.

News December 3, 2025

வாடகை வீட்டில் இருப்போருக்கு ஹேப்பி நியூஸ்

image

சென்னை போன்ற பெருநகரங்களில் அட்வான்ஸ் தொகையை கேட்டாலே கிறுகிறுக்கும். இந்நிலையில், வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி இனி 2 மாத வாடகையை அட்வான்ஸாக கொடுத்தாலே போதுமானது. அதேபோல், குடியேறிய 12 மாதங்களுக்கு பிறகே வாடகையை உயர்த்த வேண்டும். வாடகை வீட்டில் பழுது ஏற்பட்டால், அதனை 30 நாள்களுக்குள் உரிமையாளர் சரி செய்து கொடுக்க வேண்டும். இந்த விதிகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

News December 3, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு கருணாநிதியே Role Model: CM

image

மாற்றுத்திறனாளிகள் கருணாநிதியை Role Model-ஆக கருத வேண்டும் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரு விபத்துக்கு பிறகு கருணாநிதிக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், அதை பொருட்படுத்தாமல் வரலாற்று சிறப்புமிக்க பல அறிக்கைகளை அவர் வெளியிட்டார் என பகிர்ந்துள்ளார். மேலும், கருணாநிதி வீல் சேரிலேயே அமர்ந்திருந்த போதிலும் பம்பரமாக சுழன்று மக்களுக்காக பணி செய்தார் எனவும் அவர் புகழ்ந்துள்ளார்.

error: Content is protected !!