News May 15, 2024
ராஜஸ்தான் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்தது

ராஜஸ்தான், ஜுன்ஜுனு பகுதியில் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கம் இயங்கி வருகிறது. நேற்றிரவு இந்த சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்துவிழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2000 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் லிஃப்டுக்குள் 14 பேர் சிக்கியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சுரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 8, 2025
நடிகர் அஜித்தின் 64-வது படத்தின் நாயகி?

நடிகர் அஜித்தின் 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். இப்படத்துக்கான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லப்பர் பந்து’ ஸ்வாசிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
News August 8, 2025
UPI ஃபெயில் ஆயிடுச்சா? இத ட்ரை பண்ணுங்க

ஓட்டலில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, UPI மூலம் பணம் அனுப்பினால், transaction ஃபெயில் என மெசெஜ் வரும். உடனே கடைக்காரர் சூடாக நம்மளை பார்ப்பார். இந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க, 1. வேறொரு UPI ஆப்பில் முயற்சி செய்யலாம் 2.நெட் பேங்கிங் பயன்படுத்தலாம் 3. கடைகளுக்கு செல்லும் போது கொஞ்சம் கையில் காசு வைத்து கொள்ளலாம். 4. டெபிட்/ கிரெடிட் கார்டுகளை உபயோகிக்கலாம். SHARE IT.
News August 8, 2025
ராசி பலன்கள் (08.08.2025)

➤ மேஷம் – சுகம் ➤ ரிஷபம் – வரவு ➤ மிதுனம் – நன்மை ➤ கடகம் – சிரமம் ➤ சிம்மம் – பிரீதி ➤ கன்னி – பக்தி ➤ துலாம் – தெளிவு ➤ விருச்சிகம் – பாராட்டு ➤ தனுசு – வெற்றி ➤ மகரம் – நலம் ➤ கும்பம் – விருத்தி ➤ மீனம் – பரிசு.