News October 20, 2025
அதர்மத்தை நீக்கி, தர்மத்தை கடைபிடிப்போம்: CPR

தீபாவளி நாளில் அதர்மத்தை நீக்கி, தர்மத்தை கடைபிடிப்போம் என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரது தீபாவளி வாழ்த்தில், பின்தங்கிய பிரிவினருக்கு நமது ஆதரவை நீட்டுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்படும் தீபங்கள் இரவை கூட்டாக ஒளிர செய்வது போல், நமது அர்ப்பணிப்பும் உறுதியும் பாரதத்தின் கூட்டு வளர்ச்சிக்கு வழிகாட்டட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
Similar News
News April 8, 2026
திமுக குறித்து மம்தா அப்படி பேசவில்லை: சகரிகா கோஸ்

பாஜக – திமுக மறைமுக கூட்டு வைத்துள்ளதாக மம்தா விமர்சித்ததாக வீடியோ வெளியாகி, TN அரசியலில் விவாதப்பொருளாக மாறியது. இந்நிலையில், இதை மறுத்துள்ள TMC ராஜ்யசபா துணை தலைவர் சகரிகா கோஸ், மம்தாவின் பேச்சு தேசிய ஊடகங்களில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார். மேலும், அதிகாரங்களை குவிக்கும் பாஜகவுக்கு எதிராக போராடும் திரிணாமுல், திமுக வரும் தேர்தலில் வெற்றிபெறும் எனத் தெரிவித்தார்.
News April 8, 2026
ஸ்டாலின் சார் வந்தாரு, நீச்சல் அடிக்க விட்டாரு: EPS

வேளச்சேரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து EPS பிரசாரம் செய்தார். அப்போது, ஆட்சிக்கு வந்தவுடன் வேளச்சேரியில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்போம் என கூறினார்களே செய்தார்களா என கேள்வி எழுப்பிய அவர், ‘ஸ்டாலின் சார் வந்தாரு, நீச்சல் அடிக்க விட்டாரு’ என பெண்கள் கிண்டல் செய்யும் அளவில்தான் திமுக ஆட்சி இருந்ததாக விமர்சித்தார். மேலும், தீயசக்தி திமுகவை ஆட்சியை விட்டு அகற்றுவோம் எனவும் ஆவேசமாக கூறினார்.
News April 8, 2026
தென்மாநில உரிமைக்கு உலை வைக்கும் பாஜக: ஸ்டாலின்

தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், மத்திய பாஜக அரசு ரகசியம் காப்பது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கிடையே அவசரமாக பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவதற்கு என்ன அவசியம் என்றும் கேட்டுள்ளார். தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் திட்டத்தை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என கூறியுள்ளார்.


