News May 2, 2024
சட்டம்-ஒழுங்கு மாநில அதிகார வரையறைக்குட்பட்டது

சட்டம்-ஒழுங்கு மாநில அதிகார வரையறைக்கு உட்பட்டது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது மேற்குவங்க அரசு தரப்பில், மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரம் தனக்கே இருப்பதாக சிபிஐ கூறுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிமன்றம், ராணுவத்தினர் முகாமில் குற்றமிழைத்தாலும் மாநில போலீசிடமே ஒப்படைக்க வேண்டுமென்று தெரிவித்தனர்.
Similar News
News January 29, 2026
அரசியல் அநாதை ஆனாரா OPS?

திமுக (அ) தவெகவில் OPS சேரலாம் எனப் பேசப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதிமுகவில் சேர ரெடி என கூறி அந்தர் பல்டி அடித்திருக்கிறார். இதற்கு, ஒரே நேரத்தில் திமுக-தவெக என இருகட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதே கூட்டணி கைகூடாமல் போனதற்கு காரணம் என்கின்றனர். அத்துடன் அவரது ஆதரவாளர்களும் திமுகவுக்கு சிதறுவதால் தற்போது அரசியல் களத்தில் தனி மரமாக நிற்கிறார் OPS என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News January 29, 2026
BREAKING: மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்.. அதிரடி திருப்பம்

அதிமுகவில் ஒன்று சேர நான் ரெடி என்று OPS வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால், TTV தினகரனும் அவரின் அருமை அண்ணன் EPS-ம் ரெடியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், OPS-ஐ அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என EPS கூறி வருகிறார். ஒருவேளை TTV தினகரன், EPS உடன் பேசி ஒப்புதல் வாங்கினால் அதிமுக கூட்டணியில் OPS இணையலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். EPS – OPS மீண்டும் இணைவது சாத்தியமா?
News January 29, 2026
போன் ஒட்டுக்கேட்பு வழக்கில் Ex CM-க்கு நோட்டீஸ்

தெலங்கானாவில் அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் போன்கள் ஒட்டுக்கேட்பு வழக்கை சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரித்து வருகிறது. இதில், ஏற்கெனவே Ex-CM சந்திரசேகர ராவின் மகன் KTR-டம் 8 மணிநேரம் SIT கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. இந்நிலையில் சந்திரசேகர ராவிடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிக்கு நிதி பெற்றது பற்றியும் நாளை அவரிடம் விசாரிக்கப்படவுள்ளது.


