News September 30, 2025
B.Ed, M.Ed மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசிநாள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். முதல் கட்ட கலந்தாய்விற்கு பின் அரசு கல்லூரிகளில் 49 காலியிடங்கள், 13 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன. இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இங்கே <
Similar News
News September 30, 2025
போலீஸிடம் இருந்து பெண்களை காப்பாற்றும் நிலை உள்ளது: EPS

திருவண்ணாமலையில் இரு காவலர்கள், இளம் பெண்ணை அவரது சகோதரி கண் முன்னரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக EPS வேதனை தெரிவித்துள்ளார். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே, தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு, பெண்களை திமுக அரசு தள்ளியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
News September 30, 2025
BREAKING: ஒருநாள் கூடுதல் விடுமுறை.. அறிவித்தது அரசு

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்.3-ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்.1 சரஸ்வதி பூஜை, அக்.2 காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 2 நாள்கள் விடுமுறையாகும். அதன்பின் அக்.4, 5 (சனி, ஞாயிறு) விடுமுறை வருகிறது. அக்.3-ம் தேதி மட்டும் பணி நாளாக இருப்பதால், விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News September 30, 2025
Women’s WC : இந்திய அணி பேட்டிங்

மகளிர் உலக கோப்பை, இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் வலுவாக காணப்படும் இந்தியா, இப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. Head to Head = 35, வெற்றி = 31 இந்தியா, 3 இலங்கை, 1 முடிவில்லை. கவுஹாத்தியில் நடக்கும் இந்த போட்டியில் யார் ஜெயிப்பாங்க?