News September 30, 2025
போலீஸிடம் இருந்து பெண்களை காப்பாற்றும் நிலை உள்ளது: EPS

திருவண்ணாமலையில் இரு காவலர்கள், இளம் பெண்ணை அவரது சகோதரி கண் முன்னரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக EPS வேதனை தெரிவித்துள்ளார். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே, தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு, பெண்களை திமுக அரசு தள்ளியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 14, 2025
நடப்பாண்டு சட்டப்பேரவை முடித்து வைப்பு: RN ரவி

ஜன.6, 2025-ல் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைத்து கவர்னர் RN ரவி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான கவர்னரின் அறிவிப்பாணை, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, அடுத்தாண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துவதற்கான தேதியை அமைச்சரவை முடிவு செய்து கவர்னருக்கு பரிந்துரை செய்யும். இது 2026-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் உரையுடன் தொடங்கும்.
News December 14, 2025
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தது தவெக

மேலும் சில அதிமுக அதிருப்தி தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என <<18535366>>செங்கோட்டையன்<<>> கூறியிருந்தார். இந்நிலையில், அந்த தலைவர்கள் யார் என கேட்டதற்கு, ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என அருண்ராஜ் பதிலளித்துள்ளார். மேலும், கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, விஜய்யின் தலைமையை ஏற்பவர்களுடனே கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
வேடிக்கையான வனவிலங்கு புகைப்படங்கள்

நிகான் காமெடி வைல்ட்லைஃப் விருதுக்காக இந்தாண்டு 109 நாடுகளில் இருந்து புகைப்படங்கள் குவிந்துள்ளன. இதில் 2025-ம் ஆண்டின் மிகவும் வேடிக்கையான வனவிலங்குப் புகைப்படங்களை பிபிசி பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்தாலே சிரிப்பு வருகிறது. இதனை, உங்களுக்காக மேலே பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


