News August 5, 2024
லக்ஷயா சென் போராடி தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டனில் லக்ஷயா சென் தோல்வியை தழுவினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்துக்காக நடைபெற்ற போட்டியில், மலேசிய வீரரை அவர் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை லக்ஷாயா கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்களையும் மலேசிய வீரர் கைப்பற்றி வெற்றி பெற்றார். இதனால், லக்ஷயா சென் பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
Similar News
News March 7, 2026
கேப்டன் சூர்யகுமார் ஓய்வு பெறுகிறாரா?

இந்திய T20 அணியின் கேப்டன் சூர்யகுமார் நாளை தனது ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான T20 WC இறுதிப் போட்டிக்கு பின், அவர் அனைத்து வடிவங்களிலிருந்தும் விடைபெறுவார் என்று கூறப்படுகிறது. வயது & ஃபார்ம் பிரச்னை காரணமாக ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. உலகக்கோப்பையை வென்ற பிறகு ரோஹித், கோலி ஓய்வை அறிவித்தது போல சூர்யகுமாரும் திட்டமிட்டுள்ளாரா?
News March 7, 2026
OPS என்றால் விசுவாசம்: CM ஸ்டாலின்

எப்போதும் அன்போடும், அமைதியோடும் சிரித்த முகத்துடன் இருப்பவர்தான் OPS என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், OPS என்றால் ஞாபகத்துக்கு வரும் ஒரே சொல் விசுவாசம், ஆனால் துரோகத்தின் அடையாளமாக இருக்கக்கூடியவர் EPS என சாடியுள்ளார். தன்னை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் EPS எனவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
News March 7, 2026
ஸ்டாலின் TAX.. நேரடியாக அட்டாக் செய்த விஜய்

நிதி சார்ந்த பல <<19322121>>வாக்குறுதிகளை<<>> விஜய் வெளியிட்டார். அப்போது, ஸ்டாலினால் செய்ய முடியாததை நீ எப்படி செய்வாய் என கேட்கிறீர்களா எனக் கேட்டு அதற்கு பதிலும் அளித்தார். அதில், பட்ஜெட் நிதியில் 20% ஸ்டாலினுக்கு செல்வதாகவும், 10% அமைச்சர்களுக்கு செல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அரசுக்குத்தான் வரி கொடுப்போம்; அரசே ஒருவருக்கு வரி கொடுப்பதை ஸ்டாலின் TAX என்று தானே சொல்ல வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.


