News August 5, 2024

லக்‌ஷயா சென் போராடி தோல்வி

image

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் தோல்வியை தழுவினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்துக்காக நடைபெற்ற போட்டியில், மலேசிய வீரரை அவர் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை லக்‌ஷாயா கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்களையும் மலேசிய வீரர் கைப்பற்றி வெற்றி பெற்றார். இதனால், லக்‌ஷயா சென் பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Similar News

News January 19, 2026

விஜய்யை பார்த்து எவ்வளவு பயம்: புகழேந்தி

image

EPS துரோகி என்ற பட்டம் பெற்றதால் மக்கள் அவரை ஏற்கவில்லை என பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். அதிமுக பலமிழந்து விட்டதாக கூறிய அவர், தற்போது களத்தில் திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே தான் போட்டி என்றார். மேலும், ஜனநாயகனுக்கு சென்சார் அனுமதி மறுக்கப்பட்டதால், விஜய்யை பார்த்து எவ்வளவு பயம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும், இப்படத்தை வைத்து அரசியல் சூழ்ச்சி நடக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

ஒரே கோயிலில் 3 ரூபங்களில் காட்சி தரும் சிவன்

image

பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதராக என 3 ரூபங்களில் சீர்காழி சட்டைநாத சுவாமி கோயிலில் ஈசன் காட்சியளிக்கிறார். 3 அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். நடு அடுக்கில், தோணியப்பர் உள்ளார். 3-வது தளத்தில் சட்டநாதராக இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

News January 19, 2026

காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

புதுவையின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஜன.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் கடந்த 3 நாள்களாக நடந்த மலர் கண்காட்சி, கார்னிவல் விழாவின் நிறைவு நாளையொட்டி இந்த விடுமுறையானது விடப்பட்டுள்ளது.

error: Content is protected !!