News May 3, 2024
ஏழைகளின் ஊட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டிலும் வெப்பம் அதிகரிப்பால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏற்காட்டில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுமார் 20% விடுதிகள் மூடப்பட்டுள்ளன. செயல்படும் விடுதிகளிலும் 40% முதல் 60% வரை வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது.
Similar News
News August 29, 2025
SPACE: கருந்துளையும் சுவாரஸ்யங்களும்..

பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மமாக கருதப்படும் கருந்துளை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், சில விஷயங்களை விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர். ▶ஒரு சின்ன ஒளி கூட கருந்துளை பக்கத்தில் செல்லமுடியாது, அது விழுங்கிவிடும் ▶திரைப்படங்களில் காண்பிப்பது போல BlackHole-கள் மூலம் வேறு உலகத்திற்கு செல்ல முடியாது ▶BlackHole-ல் Gravity அதிகம் என்பதால், அதில் சிக்குபவர்கள் நூடுல்ஸ் போல ஆகிவிடுவார்களாம்.
News August 29, 2025
IMF நிர்வாக இயக்குநராகிறார் உர்ஜித் படேல்

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிர்வாக இயக்குநராக, RBI ex கவர்னர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் இப்பதவியில் நீடிப்பார். 2016 – 2018 வரை RBI ஆளுநராக படேல் செயல்பட்டார். பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இவரது பதவிக் காலத்தில் மத்திய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் மோதல் போக்கு நிலவியது குறிப்பிடத்தக்கது.
News August 29, 2025
IND – JPN இணைந்தால் புதிய தொழில்புரட்சி: PM நம்பிக்கை

ஜப்பானின் தொழில்நுட்பமும், இந்தியாவின் திறமையும் இணைந்து புதிய தொழில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என PM மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள மோடி, மெட்ரோ முதல் செமி கண்டக்டர் வரை இந்தியாவும், ஜப்பானும் நெருங்கிய ஒத்துழைப்பை கொண்டுள்ளதாகவும், ஜப்பானின் ஒத்துழைப்புடன் மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.